என் மலர்

  கன்னி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo

  வார ராசி பலன்கள்

  இந்த வாரம் எப்படி 13-6-2022 முதல் 19-6-2022 வரை

  தர்மம் தலை காக்கும் நேரம்.ராசி அதிபதி புதன் பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உங்களின் பழைய கவுரவத்தை நிலை நிறுத்திக் கொள்வீர்கள். உங்களின் தனித் திறமையால் சமூகத்தில் நற்பெயர் பெறுவீர்கள். சிலருக்கு புதிய தொழில் வாய்ப்பு அமையும். தொழிலில் கிடைக்கும் லாபம் வியாபாரிகளின் முகத்தில் மகிழ்ச்சியைத் தரும்.

  குலத் தொழிலில் இருப்பவர்கள் தந்தையின்ஆலோசனைகளைக் கேட்டு அதன்படி நடப்பது முக்கியமானதாகும். சிலருக்கு தந்தையின் வாரிசு வேலை கிடைக்கும். திருமணத்திற்கு நண்பர்கள் மூலம் எதிர்பார்த்ததொகை கைக்கு கிடைக்கும். சுற்றமும், நட்பும் நிறைந்த சூழலில் கோலாகலமாக திருமணம் நடைபெறும். இந்த வாரத்தில் சிலருக்கு திருமணம் நிச்சயமாகும். 8 மிட ராகுவால் கணவரால் மனைவிக்கு, மனைவியால் கணவருக்கும் எதிர்பாராத அதிர்ஷ்டமான யோகங்கள் உண்டாகலாம்.

  பெண்கள் வீட்டிற்கு தேவையான சில முக்கிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். அசைவ உணவு பிரியர்கள் பலர் தூய சைவ உணவிற்கு மாறுவார்கள்.

  'பிரசன்ன ஜோதிடர்'

  ஐ.ஆனந்தி

  செல்: 98652 20406

  ×