என் மலர்

  விருச்சகம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo

  இந்த வார ராசிப்பலன்

  11.7.2022 முதல் 17.7.2022 வரை

  தர்மசிந்தனைகள் மேலோங்கும். 2,5-ம்அதிபதி குருவால் உங்கள் வாக்கு நிறைவேறும்.ஆன்லைன், பங்கு சந்தை வர்த்தகங்கள் அபரிமிதமான லாபத்தைக் கொடுக்கும்.சிறிய முதலீட்டில் அதிக லாபம் பார்ப்பீர்கள். எதிர்பார்த்த காரியங்கள் தடையின்றி நடக்கும்.

  ராசி, 6-ம் அதிபதி செவ்வாய் ஆட்சி பலம் பெற்று ராகுவுடன் சேர்க்கை பெற்றதால் வேலை இல்லாதவர்களுக்கு புதிய வேலைகள் கிடைக்கும். சொத்து தொடர்பாக சகோதர, சகோதரிகளுடன் மன பேதம்ஏற்படும் சாத்தியக் கூறுகள் உள்ளது. ஆனால் நீங்கள் எதார்த்தமாக விட்டுக் கொடுப்பீர்கள். சிலருக்கு புதியதாக அரசியல் ஆர்வம் உண்டாகும்.

  எவர் தடுத்தாலும் முன்வைத்த காலை பின் வைக்க மாட்டீர்கள். பெற்றோர்களின் நல் ஆசிகளைப் பெறுவீர்கள். எதிர்பார்த்த பணவரவு உண்டாகும். அடமான நகைகளைகள் மீளும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உள்ளது. பெண்களுக்கு பணவரவு திருப்திகரமாக இருக்கும். விவசாயிகள் அதிக போட்டிகளைச் சந்திக்க நேரும். மொத்தத்தில் சங்கடங்கள் விலகி சாதகமான முன்னேற்றம் ஏற்படும்.செவ்வாய் கிழமை முருகனை வழிபடவும்.

  'பிரசன்ன ஜோதிடர்'

  ஐ.ஆனந்தி

  செல்: 98652 20406

  ×