search icon
என் மலர்tooltip icon

    துலாம்

    இந்தவார ராசிபலன்

    26.2.2024 முதல் 3.3.2024 வரை

    திட்டமிட்ட காரியங்கள் அனைத்தும் நிறைவேறும் வாரம். லாபாதிபதி சூரியன் பஞ்சம ஸ்தானத்தில் பாக்கியாதிபதி புதன் மற்றும் பஞ்சமாதிபதி சனியுடன் சேர்ந்து நிற்பது நற்பலன்களை அதிகரிக்கும் அமைப்பாகும். எந்த ஒரு செயலிலும் சாமர்த்தியமாக செயல்பட்டு இலக்கை அடைவீர்கள். கடந்த காலத்தில் நிலவிய பிரச்சினைகள் இருந்த இடம் தெரியாது. பங்குச் சந்தையில் நல்ல ஆதாயம் கிடைக்கும். முன்பு வாங்கி வைத்த பங்குகளின் மதிப்பு உயரும். சொத்து விற்பனையில் பெரும் பணம் கிடைக்கும்.பதவி உயர்வு, இடமாற்றம் தொடர்பான மன உளைச்சல் அகலும். சிலருக்கு கவுரவப் பதவிகள் கிடைக்கும்.

    ராசிக்கு குரு பார்வை இன்னும் 2 மாதங்களுக்கு மட்டுமே கிடைக்கப் போகிறது. எனவே பல வருடங்களாக தடைபட்ட முக்கிய பிரச்சனைகளை விரைந்து செயல்பட்டு சரி செய்வது நல்லது. குறிப்பாக திருமணம், பிள்ளை பேறு, சொத்து வாங்குவது, விற்பது போன்றவற்றிற்கு தனி கவனம் செலுத்த வேண்டும். மாணவர்களுக்கு கல்லூரிப் படிப்பை தொடரலாமா, பணிக்குச் செல்லலாமா என்ற மனக் குழப்பம் நிலவும். துர்க்கை வழிபாடு நல்லது.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ×