என் மலர்
சிம்மம்
வார ராசிபலன் 7.12.2025 முதல் 13.12.2025 வரை
7.12.2025 முதல் 13.12.2025 வரை
சிம்மம்
நல்ல மாற்றங்களும், வாய்ப்புகளும் தேடி வரும் வாரம். முக்கூட்டு கிரகங்களான சூரியன், புதன், சுக்கிரன் ராசிக்கு 4-ம்மிடமான சுகஸ்தானத்தில் சேர்ந்துள்ளார்கள். இதுவரை சுணங்கி கிடந்த யோசனைகள் விறுவிறுப்படையும். கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தினால் நல்ல மாற்றங்கள் வரும். மண்மனை, பூமி, வாகனம் வாங்கக்கூடிய யோகம் உள்ளது.
சொத்துக்களால் ஏற்பட்ட மன உளைச்சல் அகலும். அடிமட்டத்தில் இருப்பவர்களுக்கு அரசின் சலுகையால் இருப்பிடம் கிடைக்கும். வியாபாரத்தில் தனித்தன்மையுடன் மிளிர்வீர்கள். தொழிலில் முன்னேற்றப் பாதையை நோக்கி அடியெடுத்து வைக்கும் நேரம். சுய ஜாதகரீதியான தசா புத்தி சாதகமாக இருந்தால் நண்பர்கள் அல்லது வாழ்க்கைத் துணையுடன் இணைந்து புதிய கூட்டுத் தொழில் முயற்சியில் ஈடுபடலாம்.
உடன் வேலை பார்ப்பவர்களால் ஏற்பட்ட கவுரவக் குறைவு அகலும். குடும்ப பிரச்சினைகளை பேசித் தீர்க்க உகந்த காலமாகும். சிலருக்கு எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டப் பொருள் கிடைக்கலாம். அல்லது பண வரவு அதிகரிக்கும். சுவாமி ஐயப்பனை வழிபட சங்கடங்கள் தீரும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406






