என் மலர்

  மகரம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo

  வார ராசி பலன்கள்

  இந்த வாரம் எப்படி 20-6-2022 முதல் 26-6-2022 வரை

  நிம்மதியான வாரம். தொழில் வளம் சிறக்கும். நிம்மதியாக தொழிலை நடத்துவீர்கள். உற்றார், உறவினர்கள் உங்கள் முன்னேற்றத்தைக் கண்டு ஆச்சரியப்படுவார்கள். குடும்ப ஸ்தான அதிபதி சனி குடும்ப ஸ்தா னத்தில் ஆட்சிபெற்றதால் குடும்பத்தில் உங்கள் ஆலோசனைக்கு முக்கியத்துவம் கிடைக்கும். வாக்கு வன்மை லாபம் பெற்றுத் தரும். 3, 12-ம் அதிபதி குருவுடன் 4, 11-ம் அதிபதி செவ்வாய் சேர்க்கை இருப்பதால் பணம், ஜாமீன் அல்லது சொத்துக்கள் தொடர்பான ஆவணங்களால் சிக்கல் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

  புரிதலுடன் செயல்பட்டால் இழப்பையும் லாபமாக மாற்றலாம். 4-ல் ராகு இருப்பதால் மாணவர்கள் விளையாட்டை தவிர்த்து எதிர்கால த்துக்கு திட்டமிடுவது முக்கியம்.பொருளாதார மந்த நிலை நீங்கும். கடன்களைக் குறைக்க புதிய முயற்சி எடுப்பீர்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்த வரை மிக நல்ல வாரம்.

  தாய், தந்தையால் ஏற்பட்ட மனக்கசப்பு மறையும். கற்ற கல்வியால் பயன் உண்டு.சிலருக்கு சொத்து விற்பனையில்மா மனாரிடம் எதிர்பார்த்த பணம் கைக்கு வரும்.வயோதிகர்களுக்கு ஆயுள் பயம் அகலும்.பிரதோஷத்தன்று பிரதோஷ வேளையில் லட்சுமிநரசிம்மருக்குமுல்லை பூ சாற்றி வழிபடவும்.

  'பிரசன்ன ஜோதிடர்'

  ஐ.ஆனந்தி

  செல்: 98652 20406

  ×