என் மலர்
மேஷம்
இந்த வார ராசிப்பலன்
5.12.2022 முதல் 11.12.2022 வரை
சகாயங்கள் நிறைந்த வாரம். ராசிக்கு 9-ல் 2,7-ம் அதிபதி சுக்ரனும் 3,6-ம் அதிபதி புதனும் இணைவதால் பூர்வீகச் சொத்து தொடர்பான உயில் எழுத பேச்சுவார்த்தை நடத்த உகந்த நேரம். எல்லைத் தகராறு, நிலத்தகராறு, வாய்க்கால் தகராறு, பட்டா சார்ந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.
ஜாமின் வழக்கில் தீர்ப்பு சாதகமாகும்.ராசி அதிபதி செவ்வாய் குடும்ப ஸ்தானத்தில் வக்ர கதியில் சஞ்சரிப்பதால் நீங்கள் நல்லது சொன்னாலும் மற்றவர்கள் தவறாகப் புரிந்து கொள்வார்கள். குடும்பத்தினரின் செய்கையால் மனக் குழப்பம் அடைவீர்கள். பெண்களுக்கு குடும்பச் சூழ்நிலை மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.
சகோதரர்களுடன் சிறுசிறு கருத்துவேறுபாடு ஏற்பட்டு சரியாகும். வெளியூர், வெளிநாட்டு பயணங்களால் அலைச்சல் மிகுதியாகும். உயர் கல்விக்கு வாய்ப்பு கிடைக்கும். குடும்பத்தினருடன் பேசி திருமணத்தை முடிவு செய்யலாம். மாற்று முறை வைத்தியத்தில் உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். ஐயப்பனுக்கு துளசி சாற்றி வணங்க மனச் சுமை குறையும். வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406