என் மலர்

  மேஷம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo

  இந்த வார ராசிப்பலன்

  22.5.2023 முதல் 28.5.2023 வரை

  அதிகப்படியான வருமானங்கள் கிடைக்கும் வாரம். பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி சூரியன் தன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பிறர் பார்த்து ஆச்சரியப்படும் அளவிற்கு உயர்வான நிலையை அடைவீர்கள். ராசி அதிபதி செவ்வாய் 10ம் மிடமான தொழில் ஸ்தானத்தைப் பார்ப்பதால் தொழிலில், வேலையில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.எந்த செயலில் ஈடுபட்டாலும் அதில் முழுமையான வெற்றி கிடைக்கும்.

  உத்தியோகஸ்தர்களுக்கு பணிச் சுமை அதிகரித்தாலும் கவுரவம் கூடும்.தொழிலில் லாபம் மூலம் பண வருவாய் அதிகரிக்கும். வியாபாரிகள் எதிர்பார்த்த வங்கிக் கடன்கள் சிரமமின்றி கிடைக்கும். இழுபறியான வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் அதிகரிக்கும்.

  அரசு வேலைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு அனுகூலமான பதில்கள் கிடைக்கும். பெரிய இடத்து சம்பந்தம், புத்திரப் பேறு கிடைக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பழநி முருகனை வழிபட முன்னேற்றம் கூடும்.

  'பிரசன்ன ஜோதிடர்'

  ஐ.ஆனந்தி

  செல்: 98652 20406

  ×