என் மலர்

  மேஷம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo

  வார ராசி பலன்கள்

  6.6.2022 முதல் 12.6.2022 வரை

  திட்டங்கள், எண்ணங்கள் செயலாக்கம் பெறும். எதற்கும் முடிவு காண முடியாமல் தவித்த நிலை மறையும்.தன அதிபதி சுக்ரன் ராசியில் ராகுவுடன் கூடுவதால் தன வரவில் தன் நிறைவு உண்டாகும். வெளிநாட்டு தொடர்பு அல்லது வேற்று மதத்தினர் ஆதரவால் புதிய தொழில் வாய்ப்பு கிட்டும். 5-ம் அதிபதி சூரியன் தன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பங்குச் சந்தை ஆதாயம் உண்டு. சிலர் பங்கு பத்திரத்தில் அதிக முதலீடு செய்யலாம். குடும்பத்தில் நிம்மதி நீடிக்கும். செய்யும் தொழிலில் லாபம், முன்னேற்றம் உண்டு.

  சிலர் வியாபார முதலீட்டை அதிகரிக்க கடன் தொகைக்கு விண்ணப்பிக்கலாம். பெண்களுக்கு மாமியார், மாமனாரின் மனமார்ந்த பாராட்டுகள் கிடைக்கும். திருமணம் பற்றிய நல்ல முடிவுகள் உங்கள் எண்ணம் போல் நிறைவேறும். சிலரின் இரண்டாம் திருமண முயற்சி பலன் தரும்.

  லாப அதிபதி சனி வக்ரம் பெற்றதால் வழக்குகள் விசாரணை தள்ளிப்போகும். மூத்த சகோதர சகோதரிகள் முன்னுக்கு பின் முரணாக பேசி குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்தலாம். அரசு அதிகாரிகளுக்கு பதவி உயர்வு நிச்சயம். பிரதோஷத்தன்று சிவனுக்கு தேன் அபிசேகம் செய்து வழிபடவும்.

  'பிரசன்ன ஜோதிடர்'

  ஐ.ஆனந்தி

  செல்: 98652 20406

  ×