அயல்நாடுகளில் வாழும் இந்தியர்களின் வருமானத்துக்கு வரி விதிப்பில்லை - நிர்மலா சீதாராமன்

அயல்நாடுகளில் வாழும் இந்தியர்களின் வருமானத்துக்கு வரி விதிக்கப்பட மாட்டாது. ஆனால், அந்த வருமானத்தில் இங்கு வாங்கும் சொத்தின் வருமானத்துக்கு வரி விதிக்கப்படும் என நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும் பட்ஜெட் - முதல்வர் பழனிசாமி பாராட்டு

மத்திய அரசின் பட்ஜெட் பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பாராட்டு தெரிவித்துள்ளார்.
நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்ததை பார்த்த குடும்பத்தினர்

நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்ததை பார்வையாளர் மாடத்தில் இருந்து அவரது மகள் வங்மயி பர்கலா உள்ளிட்ட குடும்பத்தினர் 4 பேர் பார்த்தனர்.
முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றம் தந்த பட்ஜெட் - வீழ்ச்சியை கண்டது பங்குச்சந்தை

மத்திய நிதி மந்திரி இன்று தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையால் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் ஏமாற்றம் அடைந்துள்ள நிலையில் இன்றைய பங்குச்சந்தை வர்த்தகம் 987.96 புள்ளிகள் சரிவில் முடிந்தது.
மீண்டும் மாற்றாந்தாய் மனப்பான்மை- பட்ஜெட் குறித்து டெல்லி முதல்வர் கருத்து

டெல்லியை மீண்டும் மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்தியிருப்பதாக, பட்ஜெட் குறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கருத்து தெரிவித்துள்ளார்.
பட்ஜெட் வரலாற்றில் நெடிய உரை - ஆனால் எல்லாமே வெற்று: ராகுல் காந்தி கிண்டல்

பாராளுமன்றத்தில் இன்று நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து மத்திய நிதி மந்திரி ஆற்றிய உரை பட்ஜெட் வரலாற்றில் நெடிய உரையாக அமைந்திருந்தாலும் எல்லாமே வெற்றுதான் என ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.
திருவள்ளுவரை சுட்டிக்காட்டிய நிர்மலா சீதாராமன் - திருக்குறள் வழி செயல்படும் மோடிக்கு பாராட்டு

பாராளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்த நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், திருவள்ளுவர் இயற்றிய திருக்குறளை சுட்டிக்காட்டி பேசினார்.
எல்.ஐ.சி. காப்பீடு நிறுவனத்தின் பங்குகளை பொதுமக்களுக்கு விற்க மத்திய அரசு முடிவு

எல்.ஐ.சி. எனப்படும் ஆயுள் காப்பீடு நிறுவனத்தில் உள்ள மத்திய அரசின் முதலீடு திரும்பப் பெறப்படும். அதன் பங்குகள் பொதுமக்களுக்கு விற்கப்படும் என நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
மத்திய பட்ஜெட்டில் வருமான வரி விகிதங்கள் குறைப்பு - வரிவிலக்கு உச்சவரம்பில் மாற்றமில்லை

பாராளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்த நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், மத்திய பட்ஜெட்டில் வருமான வரி விகிதங்கள் குறைக்கப்படடு உள்ளது என தெரிவித்தார்.
ஆதிச்சநல்லுரில் அருங்காட்சியகம் அமைக்க நடவடிக்கை - நிர்மலா சீதாராமன்

பாராளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்த நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், தமிழகத்தின் ஆதிச்சநல்லுரில் தொல்லியல் துறை சார்பில் அருங்காட்சியகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பேசினார்.
மத்திய பட்ஜெட்- ஜல் ஜீவன் திட்டத்திற்கு ரூ.3.6 லட்சம் கோடி ஒதுக்கீடு

மத்திய பட்ஜெட்டில் ஜல் ஜீவன் திட்டத்திற்கு ரூ.3.6 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
பட்ஜெட் உரையில் அவ்வையாரின் ஆத்திச்சூடியை நினைவு கூர்ந்த நிர்மலா சீதாராமன்

பாராளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்த நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், அவ்வையாரின் ஆத்திச்சூடியை மேற்கோள் காட்டி பேசினார்.
மத்திய பட்ஜெட்- கல்வித்துறையில் நேரடி அந்நிய முதலீட்டுக்கு அனுமதி

கல்வித்துறையில் நேரடி அந்நிய முதலீட்டுக்கு அனுமதி அளிக்கப்படும் என மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய நிர்மலா சீதாராமன் கூறினார்.
விவசாயத் துறையை மேம்படுத்த 16 அம்ச திட்டங்கள் - நிர்மலா சீதாராமன்

பாராளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்த நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், விவசாயத் துறையை மேம்படுத்துவதற்கு 16 அம்ச திட்டங்கள் உருவாக்கப்பட்டு உள்ளது என தெரிவித்துள்ளார்.
ஜிஎஸ்டி வந்த பின் சாமானிய மக்களின் சேமிப்பு அதிகரிப்பு- நிர்மலா சீதாராமன்

பாராளுமன்றத்தில் இன்று மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றிய நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி வந்த பின் சாமானிய மக்களின் மாதாந்திர சேமிப்பு 4 சதவீதமாக அதிகரித்திருப்பதாக கூறினார்.
மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் பட்ஜெட் - நிர்மலா சீதாராமன்

2020-21-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதாக இருக்கும் என மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன்

பாராளுமன்ற மக்களவையில் 2020-2021ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார்.
2020-21 ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்ய நிர்மலா சீதாராமன் பாராளுமன்றம் வந்தடைந்தார்

2020-21-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பாராளுமன்றம் வந்தடைந்தார்.
மத்திய பட்ஜெட்- ரெயில் கட்டணம் உயர வாய்ப்பு இல்லை

பயணிகள் ரெயில் கட்டணம் கடந்த ஜனவரி 1 ஆம் தேதி உயர்த்தப்பட்டதால், இன்று ரெயில் கட்டணம் உயர்வு பற்றிய அறிவிப்பு இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
1