கோவில்பட்டி ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் ஆடி திருவிழா

கோவில்பட்டி மந்தித்தோப்பு ரோட்டில் உள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் ஆடி திருவிழா சிறப்பு சங்கல்ப பூஜை நடந்தது.
பாதாள மாரியம்மனுக்கு 1 லட்சம் வளையல்களால் அலங்காரம்

அம்மன் அணிந்த வளையல்களை அணிந்தால் குழந்தை பாக்கியம் ஏற்படும் என்பதால் வளையல்கள் பெறுவதற்கு ஆலயத்துக்கு பெண்கள் வந்த வண்ணம் இருந்தனர்.
குலசேகரன்பட்டினம் கோவிலில் வெளியே நின்று வழிபட்ட பக்தர்கள்

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் பக்தர்கள் கோவிலின் வெளியே நின்றவாறு வழிபட்டு சென்றனர்.
பரமத்திவேலூர் அம்மன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம்

பரமத்திவேலூர் பகுதியில் உள்ள அம்மன் கோவில்களில் ஆடி மாத கடைசி வெள்ளியையொட்டி சிறப்பு பாலாபிஷேகம், சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.
ராஜகாளியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா

திருப்பத்தூரில் உள்ள ராஜகாளியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு ராஜகாளி அம்மனுக்கும், மரத்தடி காளியம்மனுக்கும் பால், உள்ளிட்ட 16 வகை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
41 அடி உயர ஆயிரம் கண்ணுடையாள் அம்மனுக்கு பூச்சொரிதல்

41 அடி உயர ஆயிரம் கண்ணுடையாளுக்கு ஆடி மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை அன்று பூக்குழி, பால்குடம், முளைப்பாரி என வெகு விமரிசையாக நடைபெறும்.
ஆடி வெள்ளியையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை

மாரியம்மன் கோவில் அபிஷேக பூஜைகளும், அலங்கார பூஜையும் நடந்தது. தொடர்ந்து, மகா தீபாராதனை நடத்தப்பட்டு, பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு வழிபாடுகளும் நடந்தன.
வாய்மேடு அகஸ்தீஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர விழா

நாகை மாவட்டம் வாய்மேட்டில் அகஸ்தீஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர விழாவையொட்டி ஆனந்தவல்லி அம்மனுக்கு பால், இளநீர், தயிர், நெய், சந்தனம் மற்றும் வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது.
ராமேசுவரம் கோவிலில் விழா: ராமநாதசுவாமி-பர்வதவர்த்தினி அம்பாள் திருக்கல்யாணம்

திருக்கல்யாண நிகழ்ச்சியை காண பக்தர்கள் யாரும் 2-வது ஆண்டாக நேற்றும் அனுமதிக்கப்படவில்லை. இதனால் பக்தர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்து கோவிலுக்கு வெளியே நின்று சாமி தரிசனம் செய்துவிட்டு சென்றனர்.
வீராம்பட்டினம் செங்கழுநீர் அம்மன் கோவில் ஆடித்திருவிழா தேரோட்டம் ரத்து

வீராம்பட்டினம் செங் கழுநீர் அம்மன் கோவில் ஆடித்திருவிழா தொடங்கியது. கொரோனாவால் தேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஆடிப்பூர விழா: கொதிக்கும் எண்ணெய் சட்டியில் கையை விட்டு வடை எடுத்த பக்தர்கள்

ஆதிபராசக்தி கோவிலில் ஆடிப்பூர விழாவில் பக்தர்கள் தங்கள் மார்பில் உரல் வைத்து மஞ்சள் இடித்தும், கொதிக்கும் எண்ணெய் சட்டியில் கையைவிட்டு வடை எடுத்து காணிக்கை செலுத்தினர்.
ராமேசுவரத்தில் ஆடி திருக்கல்யாண திருவிழா:சுவாமி-அம்பாள் மாலை மாற்றுதல் நிகழ்ச்சி

ராமேசுவரம் கோவிலில் ஆடி திருக்கல்யாண திருவிழாவில் கலந்து கொள்ள பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து நிகழ்ச்சிகளும் கோவிலின் உள்ளேயே நடைபெற்று வருகின்றன.
2 லட்சம் வளையல்களால் மேல்மலையனூர் அங்காளம்மனுக்கு சிறப்பு அலங்காரம்

மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் ஆடிப்பூரத்தையொட்டி கருவறையில் உள்ள அம்மனுக்கும், சிவபெருமானுக்கும் பல்வேறு விதமான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்து, வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டது.
ஆடிப்பூரம்: கோடம்பாக்கம் ஸ்ரீதேவி கருமாரி அம்மன் கோவிலில் அம்மனுக்கு வளையல் அலங்காரம்

கோடம்பாக்கம் ஆண்டவர் நகர் முதல் தெருவில் உள்ள ஸ்ரீதேவி கருமாரி அம்மன், பிரத்யங்கிரா தேவி கோவிலில் அம்மனுக்கு ஒரு லட்சத்து 8 ஆயிரம் வளையல்களால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.
இன்று நாக சதுர்த்தி: சிறப்பும்... விரத பலன்களும்...

புத்திரப்பேறு உண்டாக நாக பிரதிஷ்டை செய்யும்படி சாஸ்திரம் கூறுகிறது. அவ்வாறு பிறந்தவர்களுக்கு நாகராஜன், நாகசுவாமி, நாகப்பன், நாகலட்சுமி எனப் பெயர் சூட்டப்படுவதைக் காணலாம்.
ஸ்ரீரங்கம் ஆடிப்பூர உற்சவம்: ஆண்டாளுக்கு துவராபதி கண்ணன் அலங்காரம்

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பரமபத நாதர் சன்னதியில் உள்ள கண்ணாடி அறையில் மூலவர் ஆண்டாளுக்கு துவராபதி கண்ணன் அலங்காரமும், உற்சவருக்கு சோலைமலைப்பெருமான் அலங்காரமும் செய்யப்பட்டிருந்தது.
பிதுர் தோஷம் நீக்கும் ஆடிமாத வழிபாடு

மறைந்த தங்கள் பெற்றோரின் பெயர், நட்சத்திரம் சொல்லி அர்ச்சனை செய்யச் சொல்கிறார்கள். பிறகு பூஜை செய்யப்பட்ட அந்தத் தட்டினை வயதான ஒரு அந்தணரிடம் தட்சிணை கொடுத்து சமர்ப்பிக்கிறார்கள்.
ராமேசுவரம் கோவில் ஆடி திருவிழாவில் இன்று அம்பாள் மாலை மாற்றுதல் நிகழ்ச்சி

ராமேசுவரம் கோவிலுக்குள் பக்தர்கள் செல்ல விதிக்கப்பட்டுள்ள தடை காரணமாகவும், பக்தர்கள் கூட்டம் கூடுவதை தடுப்பதற்காகவும் திருவிழா நிகழ்ச்சிகள் அனைத்தும் கோவிலுக்குள்ளேயே நடைபெற்று வருகின்றன.
ஆடிப்பூரத்தையொட்டி பெருவுடையார்-பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்

தஞ்சை பெரிய கோவிலில், ஆடிப்பூர விழாவையொட்டி, பெருவுடையார், பெரியநாயகி அம்மன் உள்பட, அனைத்து பரிவார தெய்வங்களுக்கும், நேற்று சிறப்பு அபிஷேகம் நடந்தது.