தொழில்நுட்பம்
ஒரு வருட அமேசான் பிரைம் சந்தா வழங்கும் ஐடியா
சென்னை
தொழில்நுட்பம்

ஒரு வருட அமேசான் பிரைம் சந்தா வழங்கும் ஐடியா

மாலை மலர்

ஐடியா நிறுவனத்தின் நிர்வானா போஸ்ட்பெயிட் சலுகையை பயன்படுத்துவோருக்கு ஒரு வருடத்திற்கான அமேசான் பிரைம் சந்தா இலவசமாக வழங்கப்படுகிறது. #Idea




ஏர்டெல், வோடபோன், பி.எஸ்.என்.எல். நிறுவனங்களைத் தொடர்ந்து வோடபோன் ஐடியா அமேசானுடன் இணைந்து ஒரு வருடத்திற்கு அமேசான் பிரைம் சந்தா இலவசமாக வழங்கப்படுகிறது. 

ஐடியா நிர்வானா போஸ்ட்பெயிட் சலுகைகளில் ரூ.399 மற்றும் அதற்கும் அதிக விலையுள்ள சலுகையை தேர்வு செய்வோருக்கு ஒரு வருடத்திற்கான அமேசான் பிரைம் சந்தா இலவசமாக வழங்கப்படுகிறது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் பிரீமியம் திரைப்படங்கள், தொலைகாட்சி நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றை பிரைம் வீடியோவில் பார்த்து ரசிக்கலாம்.

இத்துடன் அமேசான் மியூசிக், இபுக் மற்றும் 1, 2 நாட்களில் இலவச டெலிவரி, பிரத்யேக அறிமுகங்கள், முன்கூட்டியே விற்பனை நிகழ்வுகள் மற்றும் பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகிறது.



ஐடியா நிர்வானா போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்கள் அமேசான் பிரைம் சந்தாவை ஆக்டிவேட் செய்வது எப்படி?

ரூ.399 மற்றும் அதற்கும் அதிக விலையில் கிடைக்கும் ஐடியா நிர்வானா போஸ்ட்பெயிட் சலுகையை தேர்வு செய்யவும்.
ஐடியா மூவிஸ் மற்றும் டி.வி. செயலியை கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஐ.ஓ.எஸ். ஆப் ஸ்டோரில் இருந்து டவுன்லோடு செய்யவும்.
மொபைல் நம்பரை பதிவு செய்து ஒருமுறை பயன்படுத்தக்கூடிய கடவுச்சொல் பெறவும்.
சிறப்பு டேட்டா - அமேசான் சலுகைக்கான பேனரை க்ளிக் செய்து ஆக்டிவேட் செய்ய வேண்டும்.
தொடர்புடையவை