உலகம்
ஒரு பாடலுக்கு 2 விதமான நடனம் ஆடிய பெண்கள்- வீடியோ வைரல்
ஸ்பெயின்
உலகம்

ஒரு பாடலுக்கு 2 விதமான நடனம் ஆடிய பெண்கள்- வீடியோ வைரல்

மாலை மலர்

  • ஸ்பெயின் நாட்டில் உள்ள மாட்ரிட் தெருக்களில் வீடியோ எடுக்கப்பட்டுள்ளது.
  • இருவரும் தங்களது நடன பாணிகளில் அசத்திய வீடியோ பயனர்களை கவர்ந்து லைக்குகளை குவித்து வருகிறது.

சமூக வலைதளங்களில் நாள்தோறும் புதுப்புது வீடியோக்கள் வெளிவந்தாலும் சில வீடியோக்கள் மட்டுமே பயனர்களிடம் வரவேற்பை பெறுகின்றன. அந்த வகையில் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ஒரு பாடலுக்கு 2 பெண்கள் இரண்டு விதமான நடனம் ஆடும் காட்சிகள் பயனர்களை ரசிக்க செய்துள்ளது.

அந்த வீடியோவில், பிரபல இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலியின் நெட்பிக்ஸ் தொடரான 'ஹீரமண்டி தி டயமண்ட் பஜார்'-ல் இடம்பெற்ற 'சகல் பான்' என்ற பாடலுக்கு 2 பெண்கள் நடனம் ஆடுகின்றனர். ஸ்பெயின் நாட்டில் உள்ள மாட்ரிட் தெருக்களில் இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது.

அதில், பூர்ணதா மொகந்தி என்ற பெண் அழகான சாம்பல்- இளஞ்சிவப்பு சேலை அணிந்து சகல் பான் பாடலுக்கு ஒடிசி நடனம் ஆடுகிறார். மற்றொரு பெண்ணான வினிதா ஸ்ரீராம் குமார், வயலட்- தங்க நிற புடவை அணிந்து அதே பாடலுக்கு பரதநாட்டியம் ஆடுகிறார்.

இருவரும் தங்களது நடன பாணிகளில் அசத்திய வீடியோ பயனர்களை கவர்ந்து லைக்குகளை குவித்து வருகிறது.


View this post on Instagram

A post shared by Purnata Mohanty (@purnatamohanty)

தொடர்புடையவை