இந்தியா
பாகிஸ்தான் வளையல் அணியவில்லை என்றால், இந்தியா அணிய வைக்கும்- கங்கனா ரனாவத்
இமாச்சல பிரதேசம்
இந்தியா

பாகிஸ்தான் வளையல் அணியவில்லை என்றால், இந்தியா அணிய வைக்கும்- கங்கனா ரனாவத்

மாலை மலர்

  • பாகிஸ்தானுக்கு ஆட்டா (மாவு), மின்சாரம் தேவை என்பது எங்களுக்குத் தெரியும். ஆனால் வளையல்கள் கூட இல்லை என்பது எங்களுக்குத் தெரியாது.
  • பாகிஸ்தான் வளையல் அணியவில்லை என்கிறர்கள். பாகிஸ்தான் வளையம் அணியவில்லை என்றால், இந்தியா அணிய வைக்கும்.

பாலிவுட் நடிகையான கங்கனா ரனாவத் இமாச்சல பிரதேச மாநிலம் மண்டி தொகுதியில் போட்டியிடுகிறார். இவர் சிம்லாவில் உள்ள குலுவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது கங்கனா ரனாவத் கூறியதாவது:-

பாகிஸ்தானுக்கு ஆட்டா (மாவு), மின்சாரம் தேவை என்பது எங்களுக்குத் தெரியும். ஆனால் வளையல்கள் கூட இல்லை என்பது எங்களுக்குத் தெரியாது. அவர்கள் (பரூக் அப்துல்லா மற்றும் மணி சங்கர் அய்யர் பாகிஸ்தான் அணுஆயுதத்தை பயன்படுத்தும் எனக் கூறியதை சுட்டிக்காட்டி) பாகிஸ்தான் வளையல் அணியவில்லை என்கிறர்கள். பாகிஸ்தான் வளையம் அணியவில்லை என்றால், இந்தியா அணிய வைக்கும்.

பயந்துபோன பிரதமர் தலைமையில் ஸ்திரமற்ற மற்றும் பலவீனமான காங்கிரஸ் ஆட்சியை இந்தியா விரும்பவில்லை. மோடியின் கரத்தை வலுப்படுத்த பா.ஜனதாவுக்கு வாக்களியுங்கள். அதை தவிர்த்து மற்ற பட்டன்களை அழுத்தினால், உங்களுடைய வாக்கு வீண் என்பதாகிவிடும்

இவ்வாறு கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவுடன் இணைப்பது குறித்து மத்திய பாதுகாப்புதுறை மந்திரி ராஜ்நாத் சிங் கருத்து தெரிவித்திருந்தார்.

அது தொடர்பாக ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், முன்னாள் மத்திய மந்திரியுமான பரூக் அப்துல்லா பதில் அளிக்கையில் "பாதுகாப்பு மந்திரி அதைச் சொன்னால், மேலே செல்லுங்கள். நாங்கள் யார் நிறுத்துவது? ஆனால் நினைவில் கொள்ளுங்கள், அவர்கள் (பாகிஸ்தான்) வளையல் அணியவில்லை. அவர்களிடம் அணுகுண்டுகள் உள்ளன. துரதிர்ஷ்டவசமாக அந்த அணுகுண்டு நம் மீது விழும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் "பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் நம்முடையது. உள்ளது மற்றும் இருக்கும். இந்தியாவின் வளர்ந்து வரும் சக்தி, கௌரவம் மற்றும் பொருளாதார முன்னேற்றம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்களை இந்தியாவில் சேர விரும்புவதற்கு வழிவகுக்கும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

மணி சங்கர் அய்யர் "பாகிஸ்தானும் ஒரு இறையாண்மை கொண்ட நாடு. எனவே, அந்நாட்டுக்கு இந்தியா மரியாதை அளிக்க வேண்டும். அதனுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். ஏனென்றால், பாகிஸ்தானிடமும் அணுகுண்டு இருக்கிறது. அப்படி மரியாதை அளிக்காவிட்டால், அவர்கள் இந்தியாவுக்கு எதிராக அணுகுண்டை பயன்படுத்துவது பற்றி பரிசீலிப்பார்கள். பாகிஸ்தானில் யாராவது பைத்தியக்கார மனிதர் பதவிக்கு வந்து, அணுகுண்டை பயன்படுத்தினால், அது நல்லதல்ல. அது இந்தியாவிலும் பாதிப்பை ஏற்படுத்தும்" என்றார்.

தொடர்புடையவை