சினிமா செய்திகள்
அஜித்குமாருக்கு போன் செய்து நலம் விசாரித்தார் விஜய்
சினிமா செய்திகள்

அஜித்குமாருக்கு போன் செய்து நலம் விசாரித்தார் விஜய்

மாலை மலர்

  • மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் 'விடாமுயற்சி' படத்தில் நடித்து வருகிறார்
  • அஜித் படப்பிடிப்புக்காக வெளிநாடுகளுக்கு செல்லும் முன்பு முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது வழக்கம்.

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் 'விடாமுயற்சி' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடந்தது. படப்பிடிப்பு முடிவடைந்து அஜித் சென்னை திரும்பினார். இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது. அஜித் படப்பிடிப்புக்காக வெளிநாடுகளுக்கு செல்லும் முன்பு முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது வழக்கம். அந்த வகையில் பரிசோதனைக்காக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில் அவரது முழு உடலையும் பரிசோதனை செய்தபோது அவரது காதுக்கு கீழ் பகுதியில் சிறிய வீக்கம் இருந்தது. அதனை கண்டறிந்த மருத்துவர்கள் நவீன சிகிச்சையின் மூலம் அந்த வீக்கத்தை அரை மணி நேரத்தில் சரிசெய்து அகற்றினார்கள். பின்னர் சிகிச்சை முடிந்து இன்று காலை நடிகர் அஜித்குமார் வீடு திரும்பினார்.

இந்நிலையில், நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் நேற்றைய தினமே அஜித் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது தொலைபேசியில் அழைத்து நலம் விசாரித்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடையவை