சினிமா செய்திகள்
புஷ்பா 2 படத்தின் மிரட்டலான டீசர் வெளியானது
சினிமா செய்திகள்

'புஷ்பா 2' படத்தின் மிரட்டலான டீசர் வெளியானது

மாலை மலர்

  • நடிகர் அல்லு அர்ஜுனின் பிறந்த நாளான இன்று ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் புஷ்பா 2 படத்தின் மிரட்டலான டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.
  • அதிரடி ஆக்ஷன் காட்சி மற்றும் அல்லு அர்ஜுனின் ஸ்டைலிஷ் வாக்கிங் காட்சியும் நிறைந்த டீசர் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்று வருகிறது.

கடந்த 2021-ம் ஆண்டு வெளியான படம், 'புஷ்பா'. தெலுங்கின் முன்னணி நடிகர் அல்லு அர்ஜுனின் அசத்தல் நடிப்பில், பிரபல இயக்குனர் சுகுமார் இயக்கிய இந்த படம் வெற்றி பெற்றதையடுத்து, இதன் அடுத்த பாகம் தற்போது உருவாகி உள்ளது.

இதில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பஹத் பாசில், சுனில் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.'மைத்ரி மூவி மேக்கர்ஸ்' இப்படத்தை தயாரித்துள்ளது. இப்படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.




இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. முதல் பாகத்தை விட மிகவும் பிரம்மாண்டமாக இந்தப் படம் தயாராகி வருகிறது.

இந்நிலையில், இப்படத்தின் நாயகி ராஷ்மிகா மந்தனாவின் ஸ்ரீவல்லி கதாபாத்திர தோற்றத்தை அவரது பிறந்த நாளை முன்னிட்டு படக்குழு வெளியிட்டது. அதில் முதல் பாகத்தைக் காட்டிலும் சற்று வித்தியாசமான தோற்றத்தில் அவர் காணப்பட்டார்.

இதனையடுத்து, நடிகர் அல்லு அர்ஜுனின் பிறந்த நாளான இன்று ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் புஷ்பா 2 படத்தின் மிரட்டலான டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.




அதிரடி ஆக்ஷன் காட்சி மற்றும் அல்லு அர்ஜுனின் ஸ்டைலிஷ் வாக்கிங் காட்சியும் நிறைந்த இந்த டீசர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று வருகிறது. சமூக வலைதளங்களில் இந்த டீசருக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

இந்நிலையில் புஷ்பா 2 திரைப்படத்தை வருகிற ஆகஸ்ட் 15 -ந் தேதி திரையரங்குகளில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.புஷ்பா தி ரைஸ் படத்தின் வெற்றியை போலவே இந்தப் பாகமும் மிகப்பெரிய வெற்றி பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

தொடர்புடையவை