சினிமா செய்திகள்
வேட்டையன் போஸ்டரை வெளியிட்ட படக்குழு
சினிமா செய்திகள்

'வேட்டையன்' போஸ்டரை வெளியிட்ட படக்குழு

மாலை மலர்

  • ரஜினியின் 170-வது படத்தை ‘ஜெய்பீம்’ இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்குகிறார்.
  • பொங்கலை முன்னிட்டு வேட்டையன் படத்தில் இருந்து ஸ்பெஷல் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

ஜெயிலர் படத்தைத் தொடர்ந்து ரஜினியின் 170-வது படத்தை 'ஜெய்பீம்' இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்குகிறார்.

படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இசை – அனிருத். இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில், ராணா, துஷாரா விஜயன், மஞ்சு வாரியார், ரித்திகா சிங் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இப்படத்திற்கு வேட்டையன் எனப் பெயரிட்டுள்ளனர். தூத்துக்குடி மற்றும் சென்னையில் படப்பிடிப்புகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், பொங்கலை அன்றுபுதிய போஸ்டரை வெளியிட உள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது. இந்நிலையில் இன்று பொங்கலை முன்னிட்டு வேட்டையன் படத்தில் இருந்து ஸ்பெஷல் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில், இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் என ரசிகர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ள படக்குழு, ரஜினி துப்பாக்கியுடன் ஸ்டைலாக நடந்து வரும் போஸ்டரை வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரில் கூலர்ஸ் அணிந்துபடி செம்ம கெத்து காட்டியுள்ளார் தலைவர்.


இதனையடுத்து வேட்டையன் ஸ்பெஷல் போஸ்டரை ரசிகர்கள் ஆவர்வத்துடன் பார்ப்பதுடன் சமூக வளைதளங்களில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். மேலும், படத்தின் ரிலீஸ் தேதி எப்போது எனவும் கேட்டு வருகின்றனர். பொங்கலுக்கு வெளியாக வேண்டிய லால் சலாம், அடுத்த மாதம் ரிலீஸாகவிருப்பதால், விரைவில் வேட்டையன் ரிலீஸ் அப்டேட்டும் கிடைக்குமா என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

தொடர்புடையவை