சினிமா செய்திகள்
தங்கலான் : விக்ரம் டீசர் வெளியீடு
சினிமா செய்திகள்

'தங்கலான்' : விக்ரம் 'டீசர்' வெளியீடு

மாலை மலர்

  • இதில் விக்ரமை அடித்து, மிதித்து சித்ரவதை செய்யும் காட்சிகள் இடம்பெற்று உள்ளது
  • தன் உடலை வறுத்திக் கொண்டு நடிகர் விக்ரம் நடித்துள்ளதை பார்த்து ரசிகர்கள் வியந்துள்ளனர்.


பிரபல இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம் 'தங்கலான்' படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தில் மாளவிகா மோகனன் ,பார்வதி கதாநாயகிகளாக நடித்துள்ளனர். பசுபதி வில்லன் வேடத்தில் நடித்துள்ளார்.




இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்து உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பாக ஞானவேல்ராஜா இப்படத்தை தயாரித்து உள்ளார்.




தங்கலான் படத்தில் 'கங்கம்மா' எனும் வேடத்தில் பார்வதி நடித்துள்ளார். 'தங்கலான்' படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் விரைவில் திரையரங்குகளில் வெளிவர உள்ளது

நடிகை பார்வதி கடந்த சில நாட்களுக்கு முன் தனது 36-வது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு 'தங்கலான்' படக்குழு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தது. மேலும் 'தங்கலான்' படத்தின் 'பர்ஸ்ட் லுக் போஸ்டர்' ஒன்றையும் படக்குழு வெளியிட்டு பிறந்த நாள் பரிசாக 'இன்பஅதிர்ச்சி' கொடுத்தது.




இந்நிலையில் நடிகர் விக்ரம் இன்று தனது 58- வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். மேலும் அவரது பிறந்த நாளை கவுரவிக்கும் வகையில் 'தங்கலான்' படத்தின் சிறப்பு 'டீசர்' இணையதளத்தில் தயாரிப்பு குழு இன்று வெளியிட்டது.

இந்த 'டீசர்' இணைய தளத்தில் தற்போது வைரலாக பரவி வருகிறது. அதில் விக்ரம் நடித்த அதிரடி சண்டை காட்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. ரசிகர்கள் விக்ரமை பாராட்டி வருகின்றனர்.




இதில் விக்ரமை அடித்து, மிதித்து சித்ரவதை செய்யும் காட்சிகள் இடம்பெற்று உள்ளது. தன் உடலை வறுத்திக் கொண்டு நடிகர் விக்ரம் நடித்துள்ளதை பார்த்து ரசிகர்கள் வியந்துள்ளனர்.

:தங்கலான்' படத்திற்காக விக்ரமுக்கு நிச்சயம் தேசிய விருது கிடைக்கும் இப்படத்தில் கடினமாக விக்ரம் உழைத்துள்ளார். படம் ரிலீசுக்கு பின் விக்ரமுக்கு பாராட்டு, மற்றும் விருதுகள் குவியும் என ரசிகர்கள் இணைய தளத்தில் பதிவிட்டுள்ளனர்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

தொடர்புடையவை