சினிமா செய்திகள்
ஜெய்பீம் பட இயக்குனருடன் இணைந்த ரஜினி.. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு..

ரஜினி - டி.ஜே.ஞானவேல்

சினிமா செய்திகள்

'ஜெய்பீம்' பட இயக்குனருடன் இணைந்த ரஜினி.. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு..

மாலை மலர்

  • நடிகர் ரஜினி தற்போது 'ஜெயிலர்' திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
  • இதைத்தொடர்ந்து ரஜினியின் 170-வது படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இதில் கன்னட நடிகர் சிவராஜ் குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார். சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் போஸ்டரையும் படத்தில் இணைந்துள்ள பிரலங்கள் பற்றியும் படக்குழு அறிவித்திருந்தது. ஜெயிலர் படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன், நடிகர்கள் யோகிபாபு, வசந்த் ரவி மற்றும் மலையாள நடிகர் விநாயகன் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ரஜினியின் 169-வது படமான ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


இந்நிலையில் ரஜினியின் 170-வது படத்தின் இயக்குனர் யார் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, 'ஜெய் பீம்' பட இயக்குனர் டி.ஜே. ஞானவேல் இப்படத்தை இயக்கவுள்ளார். லைகா புரொசக்ஷன் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். மேலும், ரஜினியின் 170-வது திரைப்படம் 2024-ஆம் ஆண்டு வெளியாகும் என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.


தொடர்புடையவை