சினிமா செய்திகள்
மீண்டும் பைக் ரைடிற்கு ரெடியான அஜித் - வைரலாகும் புகைப்படம்
சினிமா செய்திகள்

மீண்டும் பைக் ரைடிற்கு ரெடியான அஜித் - வைரலாகும் புகைப்படம்

மாலை மலர்

  • பைக் பயணம் மேற்கொள்வதை அஜித் வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.
  • இந்த படத்தின் படப்பிடிப்பு ஓராண்டுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் அஜித். இவர் சினிமா மட்டுமின்றி பைக் பிரியர் என்பது அனைவரும் அறிந்ததே. இந்தியா மற்றும் உலகின் பல்வேறு நாடுகளுக்கு பைக் பயணம் மேற்கொள்வதை அஜித் வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.

இவர் நடிப்பில் கடைசியாக வெளியான துணிவு படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து இவர் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை மகிழ் திருமேனி இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஓராண்டுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்ததாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து நடிகர் அஜித் சென்னை திரும்பி குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டார். சில தினங்களுக்கு முன்பு அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்ட நடிகர் அஜித் அதன் பிறகு தனது மகனின் பள்ளிக்கு சென்றார்.

இந்த நிலையில், நடிகர் அஜித் அடுத்தக்கட்ட பைக் பயணத்தை துவங்கி இருப்பதை சூசகமாக தெரிவிக்கும் வகையில் புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது. அந்த புகைப்படத்தில் நடிகர் அஜித் பைக் பயணத்திற்கு ஏற்ற உடையில் காணப்படுகிறார். இதோடு அவர் பைக் பயணம் செல்லவிருப்பதை தெரிவிக்கும் வகையில், புகைப்படத்திற்கு தலைப்பிடப்பட்டு உள்ளது. இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்


தொடர்புடையவை