![ஆறாயிரம் வருடம் முந்தைய கதை- பிரபாஸ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு ஆறாயிரம் வருடம் முந்தைய கதை- பிரபாஸ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு](https://media.maalaimalar.com/h-upload/2024/01/12/2001472-23.webp)
ஆறாயிரம் வருடம் முந்தைய கதை- பிரபாஸ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
![](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் 'கல்கி 2898- ஏடி' .
- இந்த படத்தில் திரைப்பிரபலங்கள் பலர் நடித்து வருகின்றனர்.
இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் 'கல்கி 2898- ஏடி' (KALKI 2898-AD). இந்த படத்தில் நடிகர் பிரபாஸ் கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக தீபிகா படுகோனே நடிக்கிறார்.
![](https://media.maalaimalar.com/h-upload/2024/01/12/2001473-22.webp)
மேலும், இதில் அமிதாப் பச்சன், கமல், திஷா பதானி, பசுபதி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். சயின்ஸ் ஃபிக்சன் படமாக உருவாகும் இப்படத்தை வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
'கல்கி 2898- ஏடி' (KALKI 2898-AD) திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ அண்மையில் வெளியாகி கவனம் பெற்றது. இதையடுத்து புதிய வடிவிலான துப்பாக்கியை படக்குழு வடிவமைப்பது குறித்தும் அதன் தயாரிப்பு குறித்தும் சமீபத்தில் வீடியோ வெளியானது.
![](https://media.maalaimalar.com/h-upload/2024/01/12/2001474-21.webp)
கல்கி 2898- ஏடி போஸ்டர்
இந்நிலையில், 'கல்கி 2898- ஏடி' (KALKI 2898-AD) திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படம் மே 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
T 4888 - The story that ended 6000 years ago.
— Amitabh Bachchan (@SrBachchan) January 12, 2024
?????? ??? ???, ????.
The future unfolds. #Kalki2898AD@SrBachchan @ikamalhaasan #Prabhas @deepikapadukone @nagashwin7 @DishPatani @Music_Santhosh @VyjayanthiFilms @Kalki2898AD #Kalki2898ADonMay9 pic.twitter.com/bb6wRqnMG3