சினிமா செய்திகள்
க்ளாப் போர்ட் அடித்து ரியோ ராஜ் படத்தை தொடங்கி வைத்த லோகேஷ் கனகராஜ்

ரியோ ராஜ் - லோகேஷ் கனகராஜ்

சினிமா செய்திகள்

க்ளாப் போர்ட் அடித்து ரியோ ராஜ் படத்தை தொடங்கி வைத்த லோகேஷ் கனகராஜ்

மாலை மலர்

  • அறிமுக இயக்குனர் ஹரி ஹரன் ராம் இயக்கும் படத்தில் ரியோ ராஜ் கதையின் நாயகனாக நடிக்கிறார்.
  • இதில் மாளவிகா மனோஜ் மற்றும் பவ்யா ட்ரிகா படத்தின் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.

அறிமுக இயக்குனர் ஹரி ஹரன் ராம் இயக்கும் படத்தில் ரியோ ராஜ் கதையின் நாயகனாக நடிக்கிறார். இதில் மாளவிகா மனோஜ் மற்றும் பவ்யா ட்ரிகா படத்தின் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். மேலும் சார்லி, அன்பு தாசன், ஏகன், கெவின் ஃபெல்சன், ப்ரவீனா மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர். பெயரிடப்படாத இப்படத்தை விஷன் சினிமா ஹவுஸ்ஸின் டாக்டர் டி.அருளானந்து (ரிச் இந்தியா) தயாரித்திருக்கிறார்.

இந்நிலையில் இப்படத்தின் பூஜை நேற்று தொடங்கியது. இதில் திரையுலகினர், நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நட்பின் அடிப்படையில் படத்தின் முதல் ஷாட்டை க்ளாப் போர்ட் அடித்து தொடங்கி வைத்தார்.

தொடர்புடையவை