சினிமா செய்திகள்
கருடன் இசை வெளியீட்டு விழாவில் SK,VJS
சினிமா செய்திகள்

'கருடன்' இசை வெளியீட்டு விழாவில் SK,VJS

மாலை மலர்

  • இந்த படத்திற்கு வெற்றிமாறன் கதை எழுத சூரியுடன் இணைந்து சசிகுமார், சமுத்திரக்கனி, உன்னிமுகுந்தன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
  • இந்த படமானது வருகின்ற மே 31ஆம் தேதி வெளியாகவுள்ளது.

'கருடன்' திரைப்படத்தில் பிரபல நடிகர் சசிகுமார் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தில் உன்னி முகுந்தன், சூரி, சமுத்திரக்கனி, மைம் கோபி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

சூரி பல திரைப்படங்களில் காமெடி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார், ஆனால் கடந்த ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த விடுதலை திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து மக்கள் மனதை வென்றார். இப்படம் சூரி திரைப் பயணத்தில் மிகப் பெரிய திருப்பு முனையாக அமைந்தது. சூரிக்கு மாபெரும் அங்கீகாரத்தை கொடுத்தது.

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து விடுதலை- 2 பாகம் உருவாகி வருகிறது. இந்நிலையில் இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் 'கருடன்' படத்தில் நடித்துள்ளார். படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன் வெளியாகி மக்களின் கவனத்தை பெற்றது.

இந்த படத்திற்கு வெற்றிமாறன் கதை எழுத சூரியுடன் இணைந்து சசிகுமார், சமுத்திரக்கனி, உன்னிமுகுந்தன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தை வெற்றிமாறன் தயாரித்துள்ளார். இந்த படமானது வருகின்ற மே 31ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் இயக்குனர் வெற்றிமாறன், சூரி, சசிகுமார், சமுத்திரக்கனி, உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்றுள்ளனர். இவர்களுடன் இணைந்து சிறப்பு விருந்தினர்களாக நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் நடிகர் விஜய் சேதுபதி ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.

சிவகார்த்திகேயன் விழாவில் கலந்துக்கொண்ட அனைத்து பிரபலங்களுக்கும் கை கொடுத்தார். விஜய் சேதுபதியை கை கொடுத்து கட்டிப்பிடித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

தொடர்புடையவை