சினிமா செய்திகள்
பிரபாஸ் என்ன கேட்டாலும் செய்ய தயார்- நடிகை பரபரப்பு பேட்டி
சினிமா செய்திகள்

பிரபாஸ் என்ன கேட்டாலும் செய்ய தயார்- நடிகை பரபரப்பு பேட்டி

மாலை மலர்

  • பிரபாசுக்கு மதிய உணவு ஏற்பாடு செய்ய விரும்புகிறேன்.
  • பாயலின் கருத்து சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

பாகுபலி படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமான நடிகராக திகழ்பவர் பிரபாஸ். சில தினங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராமில் என் வாழ்க்கையில் அனைத்து செல்லங்களும் ஸ்பெஷல். காத்திருங்கள் என பதிவிட்டிருந்தார். இதை தொடர்ந்து பிரபாஸ் திருமணத்திற்கு தயாராகி விட்டார். அதைப்பற்றி தான் பேசப்போகிறார் என திரை உலகினர் மத்தியில் பரபரப்பு பற்றி கொண்டது.

இந்நிலையில் பிரபல நடிகையான பாயல் ராஜ்புத் பிரபாஸ் பற்றி கூறியதாவது:-

பிரபாசை எனக்கு மிகவும் பிடிக்கும். எல்லா ஞாயிற்றுக் கிழமைகளையும் தனித்தனியாக காதலிக்கிறேன். பிரபாசுக்கு மதிய உணவு ஏற்பாடு செய்ய விரும்புகிறேன்.

அவர் என்ன கேட்டாலும் நான் செய்ய வேண்டும். ராஜ்மா சாதம் எனக்கு மிகவும் பிடித்த உணவு. அந்த உணவை ஸ்பெஷலாக சமைத்து பிரபாசுக்கு என் கையால் ஊட்டுவேன். வாய்ப்பு கிடைத்தால் விட மாட்டேன். எல்லாம் என் கையால் செய்வேன் என்று கூறினார்.

பாயலின் கருத்து சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பாயல் ராஜ்புத் ஆர்.எக்ஸ்.100 என்ற தனது முதல் படத்திலேயே எல்லையில்லாத கவர்ச்சியில் தைரியமாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். ஆர்.எக்ஸ்.100 படத்தில் உதட்டுடன் உதடு முத்த காட்சியில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையவை