சினிமா செய்திகள்
பார்வதி பிறந்தநாள் : தங்கலான் படக்குழு வெளியிட்ட போஸ்டர்
சினிமா செய்திகள்

பார்வதி பிறந்தநாள் : தங்கலான் படக்குழு வெளியிட்ட போஸ்டர்

மாலை மலர்

  • 'தங்கலான்' படத்தின் 'பர்ஸ்ட் லுக் போஸ்டர்' ஒன்றையும் படக்குழு வெளியிட்டு பிறந்த நாள் பரிசாக ' கொடுத்து உள்ளது.
  • வருகிற மே, அல்லது ஜூன் மாதம் 'தங்கலான்' படத்தை 'ரிலீஸ்' செய்ய படக்குழு திட்டமிட்டு உள்ளது.

பிரபல மலையாள நடிகை பார்வதி. 2006- ம் ஆண்டு 'அவுட் ஆப் தி சிலபஸ்' எனும் படத்தில் நடிகையாக அறிமுகமானார். மலையாள முன்னணி நடிகையான பார்வதி 2008- ல் தமிழில் 'பூ' படத்தில் நடித்தார்.

மேலும் 'சென்னையில் ஒரு நாள்', மரியான், உத்தம வில்லன், பெங்களூர் நாட்கள், சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்கள உள்பட பல படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது ' தங்கலான்' படத்தில் பார்வதி நடித்து வருகிறார்.

இப்படத்தை பிரபல இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கி வருகிறார்.இந்த படத்தில் பிரபல நடிகர் விக்ரம், மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். தங்கலான் படத்தில் 'கங்கம்மா' எனும் வேடத்தில் பார்வதி நடித்துள்ளார்.




சொந்த ஊரான கோழிக்கோடுவில் நடிகை பார்வதி இன்று தனது 36-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு 'தங்கலான்' படக்குழு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தது.

இதை யொட்டி மேலும் 'தங்கலான்' படத்தின் 'பர்ஸ்ட் லுக் போஸ்டர்' ஒன்றையும் படக்குழு வெளியிட்டு பிறந்த நாள் பரிசாக 'இன்பஅதிர்ச்சி' கொடுத்து உள்ளது.

மேலும் நடிகை பார்வதி பிறந்தநாளை யொட்டி ஏராளமான ரசிகர்கள் இணைய தளத்தில் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். வருகிற மே, அல்லது ஜூன் மாதம் 'தங்கலான்' படத்தை 'ரிலீஸ்' செய்ய படக்குழு திட்டமிட்டு உள்ளதாக தெரிகிறது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

தொடர்புடையவை