சினிமா செய்திகள்
கல்நாயக் - 2 - ரன்பீர் , ரன்வீர், யாஷ் உள்ளிட்டோரிடம் பேச்சுவார்த்தை
சினிமா செய்திகள்

'கல்நாயக் - 2' - ரன்பீர் , ரன்வீர், யாஷ் உள்ளிட்டோரிடம் பேச்சுவார்த்தை

மாலை மலர்

  • ரன்பீர் கபூர், ரன்வீர் சிங், நடிக்க வைக்க இயக்குனர் சுபாஷ் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
  • விரைவில் கல்நாயக் -2 படம் தயாரிப்பு பணிகள் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

1993 - ம் ஆண்டு வெளிவந்த இந்தி ஆக்ஷன் திரைப்படம் 'கல்நாயக்' . முக்தா ஆர்ட்ஸ் பிலிம்ஸ் சார்பில் சுபாஷ் காய் எழுதி, இயக்கி இந்த படத்தை தயாரித்தார். இப்படத்தில் சஞ்சய் தத், மாதுரி தீட்சித் மற்றும் ஜாக்கி ஷெராப் உள்ளிட்ட பலர் நடித்தனர் .

இந்த படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்று வசூல் சாதனை படைத்தது.இப்படத்தின் 'சோலி கே பீச்சாய் க்யா ஹை' என்ற பாடல் பட்டி தொட்டி எல்லாம் ஒலித்தது.

இந்நிலையில் 30 ஆண்டுகளுக்கு பிறகு 'கல்நாயக் 2' படத்தை இயக்குனர் சுபாஷ் மீண்டும் எடுக்க திட்டமிட்டுள்ளார். இந்த படத்திற்கான கதையை அவர் தயார் செய்துள்ளார்.


இந்த படத்தில் பிரபல நடிகர்கள் ரன்பீர் கபூர், ரன்வீர் சிங், யாஷ் மற்றும் அல்லு அர்ஜுன் போன்ற நடிகர்களை நடிக்க வைக்க இயக்குனர் சுபாஷ் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

மேலும் இப்படத்தில் நடிக்க உள்ள நடிகர் ,நடிகைகள் குறித்தும் அவர் ஆலோசித்து வருகிறார். விரைவில் கல்நாயக் -2 படம் தயாரிப்பு பணிகள் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

தொடர்புடையவை