சினிமா செய்திகள்
அட்லி பிறந்தநாள் ட்ரீட்.. ஜவான் படத்தின் பட்டாசா.. வீடியோ வெளியீடு
சினிமா செய்திகள்

அட்லி பிறந்தநாள் ட்ரீட்.. 'ஜவான்' படத்தின் 'பட்டாசா..' வீடியோ வெளியீடு

மாலை மலர்

  • ஷாருக் கான் நடிப்பில் வெளியான ஜவான் திரைப்படம் இந்திய அளவில் மாபெரும் வெற்றியை பெற்று இருக்கிறது.
  • இயக்குநர் அட்லீயின் பிறந்த நாளை முன்னிட்டு பாடல் வீடியோ வெளியிடப்பட்டு இருக்கிறது.

இந்திய சினிமா ரசிகர்களின் மிகவும் விருப்பத்துக்குரிய நட்சத்திர ஜோடிகள் ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன். இவர்கள் தங்களுடைய ஒருமித்த ஒத்துழைப்பால் திரையில் மாயாஜாலத்தை நிகழ்த்தும் வரலாற்றை தொடர்கிறார்கள்.

பிரம்மாண்ட வெற்றி பெற்ற 'ஜவான்' திரைப்படத்தில் ஷாருக் கான் - தீபிகா படுகோன் இடையேயான அட்டகாசமான கெமிஸ்ட்ரிக்கு ரசிகர்கள் பேராதரவு அளித்து வருகின்றனர். இவர்களின் தீவிர ஆதரவாளர்களை மகிழ்விக்க, படத்தின் தயாரிப்பாளர்கள் 'பட்டாசா..' எனத் தொடங்கும் பாடலின் வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

'ஜவான்' திரைப்படம் இந்திய திரையுலகில் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. பல பாக்ஸ் ஆபீஸ் சாதனைகளை தகர்த்தெறிந்திருக்கிறது. விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களிடமிருந்து ஏகோபித்த பாராட்டுகளை பெற்றிருக்கிறது.

தொடர்புடையவை