சினிமா செய்திகள்
கங்குவா தீபாவளிக்கு வெளியாகிறதா?
சினிமா செய்திகள்

கங்குவா தீபாவளிக்கு வெளியாகிறதா?

மாலை மலர்

  • தென்னிந்திய திரையுலகில் புகழ்பெற்ற நடிகர் சூர்யா தற்போது 'கங்குவா' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் சிவா இயக்குகிறார்.
  • கங்குவா படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன் வெளியாகியது.

தென்னிந்திய திரையுலகில் புகழ்பெற்ற நடிகர் சூர்யா தற்போது 'கங்குவா' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் சிவா இயக்குகிறார்.

இதில், திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடிக்கின்றனர். இந்த படத்தின் இறுதி காட்சி படப்பிடிப்பு வேலைகள் முடிந்த நிலையில் தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது .

கங்குவா படத்தின் டீசர் சில வாரங்களுக்கு முன் வெளியாகியது. வெளியான குறுகிய நேரத்தில் பலக் கோடி பார்வைகளை பெற்றது. டீசரில் சூர்யா மிக அற்புதமாக நடித்து இருப்பார். இந்நிலையில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு படக்குழுவினர் ஒரு புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

இதைத்தொடர்ந்து தயாரிப்பாளர் தனஞ்செயன் செய்தியாளர்களிடம் கங்குவா படத்தின் தயாரிப்பாளரான ஞானவேல்ராஜா கங்குவா திரைப்படத்தை வரும் திபாவளிக்கு வெளியிடுவதற்கு திட்டமிட்டுள்ளார் எனவும். இந்தாண்டு ஆகஸ்ட் மாத இறுதியில் படத்தின் வி.எஃப்.எக்ஸ் மற்றும் 3டி வேலைகள் முடிந்துவிடும் எனவும், படத்தை 10 மொழிகளிலும் வெளியிடப்போவதாக கூறியுள்ளார். இதனால் சூர்யா ரசிகர்கள் மிகவும் உற்சாகத்தில் உள்ளனர்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


தொடர்புடையவை