சினிமா செய்திகள்
தனுஷ் இயக்கும் ராயன்-ல் எஸ்.ஜே.சூர்யா: பர்ஸ்ட் லுக் வெளியிட்டது படக்குழு
சினிமா செய்திகள்

தனுஷ் இயக்கும் "ராயன்"-ல் எஸ்.ஜே.சூர்யா: பர்ஸ்ட் லுக் வெளியிட்டது படக்குழு

மாலை மலர்

  • சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.
  • இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

தனுஷ் இயக்கி நடிக்கும் அவரின் 50-வது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த 19ம் தேதி வெளியானது. டி50 என அறியப்பட்ட இப்படத்திற்கு ராயன் என பெயரிடப்பட்டுள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

தனுஷ் இயக்கி நடிக்கும் அவரின் 50-வது படத்தின் படப்பிடிப்பு அண்மையில் துவங்கியது. அது தொடர்பான போஸ்டரை படக்குழு அப்போது வெளியிட்டிருந்தது. அதில் தலையில் கேப் அணிந்து தனுஷ் இருக்கும் இந்த புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இந்நிலையில் ராயன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ள படக்குழு, தமிழ், தெலுங்கு,ஹிந்தி ஆகிய மூன்று மொழியில் இப்படம் வெளியாகும் என தெரிவித்துள்ளது.

இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். எஸ்.ஜே.சூர்யா, காளிதாஸ் மற்றும் சந்தீப் கிஷன் உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ள இத்திரைப்படம் இந்த ஆண்டே வெளியாகும் என பட நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், 'ராயன்' படத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யாவின் ஃபர்ஸ்ட் லுக்கை தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் இன்று மாலை வெளியிட்டது.

தொடர்புடையவை