சினிமா
குட்டி திரிஷாவின் மலையாள படம்
சென்னை
சினிமா

குட்டி திரிஷாவின் மலையாள படம்

மாலை மலர்

விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 96 படத்தில் குட்டி திரிஷாவாக நடித்த கவுரி, தற்போது மலையாள படத்தில் நடித்து வருகிறார். #96Movie #GouriKishan

விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான 96 திரைப்படம் பெரியளவில் வெற்றி பெற்றதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் முக்கியமான ஒரு காரணம், இளவயது கதாபாத்திரங்களுக்கான நடிகர், நடிகை தேர்வும் அவர்களது கச்சிதமான நடிப்பும் தான். 

ஆதித்யா பாஸ்கரும் கவுரி கி‌ஷனும் விஜய்சேதுபதியாக, திரிஷாவாக மாறி நடித்திருந்தனர். இருவரும் தமிழ் திரையுலகில் அடுத்தடுத்து பல படங்களில் ஒப்பந்தமாகி நடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ள நிலையில் கவுரி கி‌ஷனை மலையாள திரையுலகம் அழைத்துள்ளது. 



துசார் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் பிரின்ஸ் ஜாய் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் கவுரிக்கு ஜோடியாக சன்னி வேயின் நடிக்கிறார். ‘அனுகிரஹித்தன் அந்தோனி’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பில் கவுரி கி‌ஷன் இணைந்துள்ளார். இதனை கவுரி கி‌ஷன் உறுதி படுத்தியுள்ளார். இந்தப் படத்தை கோடை விடுமுறையை முன்னிட்டு வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
தொடர்புடையவை