சினிமா
96 படத்தின் 100 நாள் கொண்டாட்டத்தில் தனது அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட விஜய் சேதுபதி
சென்னை
சினிமா

96 படத்தின் 100 நாள் கொண்டாட்டத்தில் தனது அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட விஜய் சேதுபதி

மாலை மலர்

விஜய் சேதுபதி - திரிஷா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான 96 படத்தின் 100 நாள் கொண்டாட்டத்தின் போது விஜய் சேதுபதி தனது அடுத்த படத்தின் தலைப்பு மற்றும் இயக்குநர் குறித்த அறிவிப்பை வெளியிட்டார். #96TheMovie #VijaySethupathi

மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் சார்பில் எஸ்.நந்தகோபால் தயாரித்து, செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித்குமார் வெளியிட்ட ‘96’ படத்தின் 100-வது நாள் விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.

இதில் விஜய் சேதுபதி, திரிஷா, இயக்குநர் பிரேம் குமார், கோவிந்த் வசந்தா உள்ளிட்ட படக்குழுவினர்களுடன் இயக்குநர்கள் சேரன், பார்த்திபன், சமுத்திரகனி, பாலாஜி தரணிதரன், பி.எஸ்.மித்ரன், லெனின் பாரதி மற்றும் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.


துக்ளக் படத்தை இயக்கும் டெல்லி பிரசாத்

இந்த நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார். இதுகுறித்து அவர் கூறும்போது, 

`இந்த படத்தை வெளியிட்ட செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் ‘துக்ளக்’ என்ற படத்தில் அறிமுக இயக்குநர் டெல்லி பிரசாத் தீனதயாள் இயக்கத்தில் நடிக்கிறேன்.' என்றார்.



இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் பார்த்திபன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, விஜய் சேதுபதியும், திரிஷாவும் ஒருவரையொருவர் ஆரத்தழுவியது வருகைத் தந்திருந்த அனைவரையும் கவர்ந்தது. #96TheMovie #96TheFilm #100thDayCelebrationOf96 #VijaySethupathi #Trisha #Thuglak

விஜய்  சேதுபதி பேசிய வீடியோவை பார்க்க:

தொடர்புடையவை