சினிமா
பிரபாசுக்கு முன்பே ராணா திருமணம் செய்து கொள்வார் - ராஜமவுலி
சென்னை
சினிமா

பிரபாசுக்கு முன்பே ராணா திருமணம் செய்து கொள்வார் - ராஜமவுலி

மாலை மலர்

பாகுபலி படத்தில் இணைந்து நடித்த பிரபாஸ், ராணா இருவரில் யார் முதலில் திருமணம் செய்து கொள்வார்கள் என்று ராஜமவுலியிடம் கேட்டதற்கு, ராணா தான் என்று அவர் பதிலளித்தார். #Prabhas #RanaDaggubati #Rajamouli

பாகுபலி படத்தில் நடித்ததன் மூலம் இணைந்த பிரபாசும், ராணாவும் அந்த படத்துக்கு பின்னர் நெருங்கிய நண்பர்களாகி விட்டனர். தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களான இருவரும் இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் காலத்தை கடத்தி வருகிறார்கள்.

பிரபாஸ் அனுஷ்காவுடனும், ராணா திரிஷாவுடனும் சிலகாலம் கிசுகிசுக்கப்பட்டவர்கள். இருவரில் யார் முதலில் திருமணம் செய்துகொள்வார் என்பது தெலுங்கு சினிமாவின் பெரிய கேள்வியாக இருந்து வந்தது. 



ராஜமவுலி, ராணா, பிரபாஸ் மூவரும் இணைந்து கலந்துகொண்ட நிகழ்ச்சி ஒன்றில் இந்த கேள்விக்கான பதில் கிடைத்துள்ளது. இருவரில் யார் முதலில் திருமணம் செய்துகொள்வார் என்ற கேள்விக்கு பிரபாசுக்கு முன்பே ராணா தான் திருமணம் செய்துகொள்வார் என்று ராஜமவுலி கூறி இருக்கிறார். இருவருக்கும் நெருக்கமானவர் என்பதால் ராஜமவுலி சொன்னது நிச்சயம் பலிக்கும் என்கிறார்கள். #Prabhas #RanaDaggubati #Rajamouli

தொடர்புடையவை