சினிமா
மீண்டும் நெருக்கம், ஜோடியாக சுற்றும் ஆரவ் - ஓவியா
சென்னை
சினிமா

மீண்டும் நெருக்கம், ஜோடியாக சுற்றும் ஆரவ் - ஓவியா

மாலை மலர்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் காதல் வலையில் சிக்கி பின்னர் சகஜமான ஓவியா, ஆரவ் இருவரும் மீண்டும் ஜோடியாக ஊர்சுற்றி வரும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. #Oviyaa #Arav

தமிழில் ‘களவானி’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி, பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமாகியவர் ஓவியா. பிக்பாஸ் நிகழ்ச்சியின் சக போட்டியாளர் ஆரவ் மீது ஓவியாவுக்கு காதல் ஏற்பட்டது. ஆரவ், ஓ காதல் கண்மணி, சைத்தான் ஆகிய படங்களில் சிறிய வேடங்களில் நடித்துள்ளார்.

இருவரும் பிக்பாஸ் அரங்கில் முத்தமிட்டு காதலை வெளிப்படுத்தினர். ஓவியாவை காதலிக்கவில்லை என்று ஆரவ் கூறியதால், அவரை மனதார விரும்பிய ஓவியா மன அழுத்தம் ஏற்பட்டு வெளியேறியதாக கூறப்பட்டது. இதை பின்னர் மறைமுகமாகவும் ஓவியா தெரிவித்தார். பின்னர் ஓவியா சகஜமானார்.

பழைய சம்பவத்தை மறந்து ஓவியாவும், ஆரவும் தற்போது சகஜமாக பழகி வருகிறார்கள், பேசிக் கொள்கிறார்கள். பொது இடங்களிலும் ஒன்றாக கலந்து கொள்ளும் புகைப்படங்களும் வெளியாகி இருக்கின்றன. 



ஆனால் தற்போது ஓவியாவும், ஆரவ்வும் மீண்டும் நெருக்கமாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சமீபத்தில் ஆரவ் பிறந்த நாள் நிகழ்ச்சியில் இருவரும் ஜோடியாக எடுத்துக்கொண்ட படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டனர். இப்போது மீண்டும் கடற்கரையில் ஜோடியாக நின்று செல்பி எடுத்து வெளியிட்டு இருக்கிறார்கள். இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. #Oviyaa #Arav

தொடர்புடையவை