Maalaimalar
கடலூரில் ஜூன் 1, 1890ல் அம்மாக்கண்ணு - முத்துமணி தம்பதிக்கு மகளாகப் பிறந்தவர். 1908ல் நெசவுத்தொழிலில் செய்யும் முருகப்பாவை மணந்தார்.
ஆங்கிலேயர்களின் அடக்குமுறையை அறிந்து, சென்னைக்கு இடம் மாறிய இத்தம்பதிகள், தங்களின் சொத்துகளை விற்று விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றனர்.
1921ல் நடைபெற்ற இவ்வியக்கத்தில் தென்னிந்தியாவில் இருந்து பங்கேற்ற முதல் பெண்மணி ஆவார். 1927ல் நீல் சிலை அகற்றும் போராட்டத்தில் பங்கேற்று, ஓராண்டு சிறையில் இருந்தார்.
1931ல் இதில் பங்கேற்ற இவர், கடுமையாகத் தாக்கப்பட்டு, 6 மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டார். 6 மாத கர்ப்பிணியாக இருந்ததால் பிரசவகாலத்தில் வெளியே அனுமதிக்கப்பட்டார். பின் குழந்தை பிறந்ததும், 15 நாள் கைக்குழந்தையுடன் மீண்டும் சிறை சென்று தண்டனையை நிறைவு செய்தார்.
1934ல் தமிழ்நாடு வந்த மகாத்மா காந்தி, அஞ்சலையை சந்திக்க விரும்பினார். ஆனால், அதற்கு ஆங்கிலேய அரசு தடை விதித்ததால், பர்தா அணிந்து வந்து காந்தியை சந்தித்தார். அவரது நெஞ்சுரத்தைப் பாராட்டி, ‘தென்னிந்தியாவின் ஜான்சிராணி’ என காந்தி புகழாரம் சூட்டினார்.
மூன்று முறை கடலூர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். தீர்த்தம்பாளையம் குடிநீர் பிரச்னையை தீர்க்க, வீராணம் கால்வாயிலிருந்து கிளை வாய்க்கால் வெட்டி தண்ணீர் பஞ்சம் தீர்த்தார். நாடு விடுதலை அடைந்தபோது, அரசு வழங்கிய தியாகிகள் ஓய்வூதியத்தை வேண்டாம் என மறுத்தவர்.
இறுதிக்காலத்தில் விவசாயப் பணிகள் மேற்கொண்டு வாழ்ந்து வந்தவர், 1961ம் ஆண்டு பிப்ரவரி 20ம் தேதி காலமானார்.