வீட்டிலேயே தயாரிக்கலாம் இயற்கையான பனீர்

Maalaimalar

அடி கனமான பாத்திரத்தில் முழு கொழுப்புள்ள பாலை ஊற்றி மிதமான தீயில் கொதிக்க வைக்கவும்.

பால் பொங்கி வரும்போது தீயை குறைத்துவிட்டு, எலுமிச்சை சாற்றுடன் சிறிது தண்ணீர் கலந்து மெதுவாக பாலில் ஊற்றவும். பால் முழுமையாகத் திரிந்து நீரும் பனீரும் தனித்தனியாகப் பிரியும் வரை கிளறவும்.

அடுப்பை அணைத்துவிட்டு, ஒரு சுத்தமான வெள்ளை நிற காட்டன் துணியில் திரிந்த பாலை ஊற்றி வடிகட்டவும். பின்னர் பனீர் மீது சாதாரண குளிர்ந்த நீரை ஊற்றவும். இதனால் எலுமிச்சை சாற்றின் புளிப்புத்தன்மை நீங்கும்.

துணியை சேர்த்துப் பிழிந்து அதிகப்படியான தண்ணீரை வெளியேற்றவும். துணியைக் கட்டி ஒரு தட்டையான பாத்திரத்தின் மீது வைத்து, அதன் மேல் ஒரு கனமான பொருளை 30 முதல் 45 நிமிடங்கள் வைக்கவும்.

பனீர் நன்றாக உறைந்ததும், துணியை அகற்றிவிட்டு உங்களுக்கு பிடித்த வடிவில் துண்டுகளாக வெட்டிப் பயன்படுத்தலாம்.