ரோகித் சர்மா 29 பந்துகளில் 47 ரன்களை விளாசி அவுட் ஆனார்..50-வது சதம் விளாசிய விராட் கோலி 117 ரன்களை குவித்தார்..ஷ்ரேயாஸ் ஐயர் 105 ரன்கள் எடுத்துள்ளார்..சௌதீ 10 ஓவர்கள் பந்து வீசி 100 ரன்களை விட்டுக்கொடுத்தார்..50 ஓவர் முடிவில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 397 ரன்கள் குவித்தது..398 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியது..கான்வே, ரச்சின் ரவீந்திரா ஆகியோர் 13 ரன்களில் ஆட்டமிழந்தனர்..நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக வில்லியம்சன் 69 ரன்னிலும், மிட்செல் 134 ரன்களிலும் அவுட்டானார்கள்..இந்தியா 70 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.