உலகளவில் கொண்டாடப்படும் ஹாலிவுட்டின் வரலாற்று திரைப்படங்கள்...

Maalaimalar

கிளாடியேட்டர்

2000ஆம் ஆண்டு வெளியான உலகப் புகழ்பெற்ற ஒரு வரலாற்று அதிரடித் திரைப்படமாகும். இப்படம் பண்டைய ரோமானியப் பேரரசைப் பின்னணியாகக் கொண்டு, பழிவாங்குதலை மையமாக வைத்து இயக்கப்பட்டது. இப்படம் 5 ஆஸ்கார் விருதுகளை வென்றுள்ளது.

ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட்

1993ஆம் ஆண்டு வெளியானது. இரண்டாம் உலகப் போரில் யூதர்களைக் காப்பாற்றிய ஒருவரின் உருக்கமான கதை. இத்திரைப்படம் சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர் உட்பட 7 ஆஸ்கார் விருதுகளை வென்றுள்ளது.

சேவிங் பிரைவேட் ரியான்

1998ஆம் ஆண்டு வெளியானது. நார்மண்டி லேண்டிங் போரை சித்தரிக்கும் சிறந்த போர் திரைப்படம். இத்திரைப்படம் சிறந்த இயக்குநர் உட்பட 5 ஆஸ்கார் விருதுகளை வென்றது.

லாரன்ஸ் ஆஃப் அரேபியா

1962ல் வெளியானது. முதல் உலகப் போர் பின்னணியில் உருவான காவியத் திரைப்படம். இப்படம் 7 ஆஸ்கார் விருதுகளை வென்றது.

12 இயர்ஸ் எ ஸ்லேவ்

2013ல் வெளியானது. அமெரிக்காவில் நிலவிய கொடூரமான அடிமை முறையை மிக எதார்த்தமாகவும், அழுத்தமாகவும் இப்படம் பதிவு செய்துள்ளது. இப்படம் 3 ஆஸ்கார் விருதுகளை வென்றது.

ஓப்பன்ஹைமர்

2023ஆம் ஆண்டு வெளியானது. அணுசக்தியின் தந்தை ஓப்பன்ஹைமரின் வாழ்க்கை மற்றும் இரண்டாம் உலகப் போரின் போது உலகின் முதல் அணு ஆயுதத்தை உருவாக்கிய 'மேன்ஹாட்டன் திட்டம்' பற்றிய கதை. இப்படம் 7 ஆஸ்கார் விருதுகளை அள்ளியது.