Maalaimalar
லண்டனில் நடைபெற்ற விம்பிள்டன் 2026 டென்னிஸ் போட்டியில் பங்கேற்ற நடிகை அனன்யா பாண்டே சிவப்பு நிற ஆடை அணிந்து அனைவரையும் கவர்ந்தார்.
விம்பிள்டனில் தவறாமல் பங்கேற்கும் பிரியங்கா சோப்ரா, இந்த ஆண்டு தனது வருகையின்போது அணிந்திருந்த வெள்ளை நிற ஆடை மற்றும் பந்தனா அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
நீலம் மற்றும் வெள்ளை நிறக் கோடுகள் கொண்ட அழகிய உடையில் கல்யாணி பிரியதர்ஷன் தோன்றினார். அவரின் கைப்பையும் காய் கடிகாரமும் அழகாக மிளிர்ந்தது.
தென்னிந்திய நட்சத்திரமான ஸ்ரீலீலாவும் விம்பிள்டனில் கலந்துகொண்டார். அவர் வரி வரியான பேன்ட்சூட்டில் மிகவும் ஸ்டைலாகக் காட்சியளித்தார்.
விம்பிள்டன் போட்டியில் வழக்கமாகப் பங்கேற்கும் சச்சின் டெண்டுல்கர் மற்றும் அவரது மனைவி அஞ்சலியும் இப்போட்டியில் காணப்பட்டனர். சச்சின் கோடு போட்ட சூட்டில் கம்பீரமாகத் தோன்ற, அவரது மனைவி பச்சை நிற ஷர்ட்-டிரெஸ்ஸில் நேர்த்தியாகக் காட்சியளித்தார்.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஷுப்மன் கில், கட்டம் போட்ட பிளேசர், தந்த நிற பேன்ட் மற்றும் நீல நிற சட்டை அணிந்து மிகவும் கம்பீரமாகக் காட்சியளித்தார்.