வீட்டை சுத்தம் செய்யும்போது முக கவசம் ஏன் அணிய வேண்டும்?

undefined

காற்று மாசுபாடு பிரச்சினை அதிகரித்து வரும் நிலையில் வீட்டை சுத்தம் செய்யும்போது தூசு துகள்கள் எளிதாக காற்றில் கலந்து சுவாசத்திற்குள் நுழையக்கூடும்.
சுவாசப்பிரச்சினை மட்டுமின்றி உள் உறுப்புகள் பாதிப்புக்குள்ளாகி உடல் நல பிரச்சினைகள் ஏற்படுவதும் தவிர்க்கப்படும்.
வீட்டை சுத்தம் செய்யும்போது தரை, ஜன்னல், கதவு, சுவர் பகுதியில் படர்ந்திருக்கும் தூசு போன்ற துகள்கள் சுவாசப் பாதையில் நுழைந்து எரிச்சலை ஏற்படுத்தும்.
இருமல், தொண்டை வலி, தும்மல் போன்ற பாதிப்புகளையும் உண்டாக்கும். அந்த சமயத்தில் முக கவசம் அணிந்திருப்பது சுவாச பிரச்சினைகளை தடுக்க உதவிடும்.
முக கவசம் தூசுகளை தடுக்க உதவுவதோடு உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பாக்டீரியா மற்றும் வைரஸ்களிடம் இருந்து பாதுகாப்பு அளிக்கும். எளிதில் நோய்த்தொற்றுக்கு ஆளாகும் நிலை ஏற்படாது.
காற்றில் கலந்திருக்கும் தூசுகள், மகரந்த தூள்கள், கண்களுக்கு புலப்படாத தீங்கு விளைவிக்கும் நுண்கிருமிகள் எளிதில் சுவாசப்பாதையில் நுழைந்து ஒவ்வாமை பாதிப்பை அதிகரிக்க செய்துவிடும்.
தூசுகளை துடைக்கும் போது,​ஒவ்வாமையை தூண்டும் அபாயத்தை எதிர்கொள்ள நேரிடும். முக கவசம் அணியும்போது அதற்கான வாய்ப்பு குறைவு.
தூசுகள் சைனஸ்களை வீக்கமடையச் செய்து சுவாசத்திற்கு இடையூறு ஏற்படுத்தும். குறிப்பாக சைனஸ் பகுதி எரிச்சலுக்கு ஆளாகக்கூடும்.
முகமூடியை அணிவது காற்றில் இருக்கும் நுண் கிருமிகளை தடுத்து சுவாசம் சீராக நடைபெற உதவும்.
வீட்டை சுத்தம் செய்யும் போது அல்லது தூசுகளை தட்டும்போது அது காற்றில் கலந்து தொண்டை பகுதியை வறண்டு போகச் செய்யும்.
முக கவசம் அணிவது தொண்டை வறட்சியைத் தடுக்கவும், ஈரப்பதத்தைத் தக்கவைக்கவும் உதவும்.
வீட்டு உபயோகப்பொருட்கள், பிளாஸ்டிக் பொருட்களில் செயற்கை தூசு கலந்திருக்கும். அதை சுவாசிப்பது, நச்சுத்தன்மை வாய்ந்ததாகவோ அல்லது எரிச்சலூட்டுவதாகவோ இருக்கலாம். முக கவசம் அணிவது தூசு துகள்களை தவிர்க்க உதவும்.
நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் தகவலின்படி முக கவசம் அணிவது சுவாசப் பிரச்சினைகளில் இருந்து பாதுகாக்க உதவும்.
சுவாசம் சார்ந்த பிரச்சினைகள் தொடர்ந்து இருந்தால் சுகாதார நிபுணரை அணுகுவது நல்லது.