Maalaimalar
ஆடி முதல் நாளன்று வீட்டில் அம்பிகையை வணங்கி, பிறகு அருகில் உள்ள அம்மன் கோவிலுக்கு சென்று வழிபடலாம்.
கலச சொம்பில் நீர் நிரப்பி, அதில் சிறிது மஞ்சள் வேப்பிலைகளை போட்டு, சாமி அறையில் வைக்கலாம்.
இலை படையல் போடும் பழக்கம் உள்ளவர்கள், வீட்டில் அம்பிகைக்கு பகல் பொழுதில் படையலிட்டு வணங்கலாம்.
ஆடி மாத பிறப்பன்று வீட்டில் மஞ்சள், உப்பு ஆகியவற்றை வாங்கி பூஜை அறையில் வைத்து வழிபடலாம்.
கோவிலில் அம்மனுக்கு நடக்கும் அபிஷேகத்திற்கு பால் வாங்கிக் கொடுக்கலாம்.
சுமங்கலி பெண்களுக்கு மஞ்சள், குங்குமம் போன்ற மங்கள பொருட்கள் வாங்கிக் கொடுக்கலாம்.