குரல் வளம் மேம்பட என்ன செய்யலாம்?

Maalaimalar

அதிமதுரம்

சிறிதளவு அதிமதுரத்தை வாயில் போட்டு மென்று வரலாம் அல்லது தூள் செய்து பாலில் கலந்து பருகுவதும் நலம் பயக்கும்.

துளசி

துளசி சாறுடன் மலைத்தேன் கலந்து சாப்பிடுவது தொண்டைக்கு இதமளிக்கும். தொண்டையில் சளி கட்டுப்டுவது நீங்கும்.

சுக்கு

சுக்கு, மிளகு, திப்பிலி ஆகியவற்றைச் சேர்த்து கஷாயம் செய்து பருகலாம். தொண்டை கரகரப்பு நீங்கி தெளிவான நிலமை கிடைக்கும்.

இஞ்சி-மஞ்சள் தேநீர்

தொண்டையில் ஏற்படும் அழற்சியைக் குறைக்க, புதிய இஞ்சி மற்றும் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் கலந்த வெந்நீரைப் பருகவும்.

தவிர்க்க வேண்டியவை

அதிக காரம், புளிப்பு, ஐஸ்கிரீம், மற்றும் குளிர்ந்த நீரைத் தவிர்க்க வேண்டும்.

ஓய்வு

அதிக சத்தமாக கத்துவதைத் தவிர்க்கவும். நீண்ட நேரம் பேசும்போது அல்லது பாடும்போது அவ்வப்போது குரலுக்கு ஓய்வு கொடுக்கவும்.