Maalaimalar
உடலுக்குத் தேவையான முக்கிய தாதுக்கள் இயற்கையாகவே தண்ணீரில் கரைந்துள்ளன. கால்சியம், மெக்னீசியம், சோடியம், பொட்டாசியம், புளோரைடு போன்றவை உள்ளடங்கும்.
உடலை நீரேற்றமாக வைத்திருப்பது சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. தினமும் சுமார் 2 முதல் 3 லிட்டர் வரை நீர் அருந்த வேண்டும்.
வெறும் வயிற்றில் சூடான தண்ணீர் குடிப்பது செரிமானப் பாதையைத் தூண்டி, உணவை எளிதில் ஜீரணிக்க உதவுகிறது.
உடலுக்கு தேவையான நீரை அருந்துவதால் மூட்டுகளுக்குத் தேவையான வழவழப்புத் தன்மையை அளித்து எலும்புகளை பாதுகாக்கிறது.
நரம்புகளை தளர்த்தி ரத்த நாளங்களை விரிவடையச் செய்வதன் மூலம் உடல் முழுவதும் ரத்த ஓட்டம் சிறப்பாகச் செயல்படும்.
சூடான தண்ணீரை அருந்தும் போது, தலைவலி மற்றும் மைக்ரேன் போன்றவை உடனடியாக நீங்கும்.
சூடான நீரின் வெப்பம் வயிற்றுத் தசைகளை தளர்த்தி, மாதவிடாய் கால பிடிப்பு மற்றும் தசை வலிகளில் இருந்து உடனடி நிவாரணம் தரும்.
இதை அறிந்துகொள்வதற்கான ஒரு நடைமுறை அறிகுறி உங்கள் சிறுநீரின் நிறமே ஆகும். அது வெளிர் நிறமாகவும் வைக்கோல் நிறத்திலும் இருக்க வேண்டும்.