விண்வெளிக்கு செல்லும் மோடியின் ஆட்டோகிராப்!

Maalaimalar

ஹைதராபாத்தை சேர்ந்த ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம் தயாரித்த விக்ரம்-1 ராக்கெட், சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து விண்ணில் பாய்கிறது.

350 கிலோகிராம் வரை எடையுள்ள பேலோடுகளை புவியின் தாழ் சுற்றுப்பாதைக்கு கொண்டு செல்லும் திறன் கொண்டது.

விக்ரம்-1 ராக்கெட் 24 மீட்டர் நீளமும் 40 டன் எடையும் கொண்டது.

இதற்கு 'மிஷன் ஆகமன்' எனப் பெயரிடப்பட்டுள்ளது.

விண்வெளிக் குப்பைகளைக் கையாள்வதற்காக உருவாக்கப்பட்ட ஒரு தனித்துவமான மென்-ரோபோ பிடிப்பு அமைப்பு உள்ளிட்ட பல தொழில்நுட்ப செயல் விளக்கங்களையும், பிரதமர் மோடியின் கையெழுத்து அஞ்சல் அட்டை ஒன்றையும் சுமந்து செல்கிறது.