விமலின் 'சார்' படத்திற்கு ஓடிடியில் குவியும் பாராட்டுகள்

Santhya

இதில் விமல் நாயகனாகவும் சாயாதேவி நாயகியாகவும் நடித்திருந்தனர். இவர்களுடன் சரவணன், விஜய் முருகன், ஆடுகளம் ஜெயபாலன், நடிகை ரமா உள்ளிட்டோரும் நடித்து இருந்தனர்.
அக்டோபர் 18ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்த படம் கல்வியின் அவசியத்தை வலியுறுத்தும் ஒரு பரம்பரையின் அர்ப்பணிப்பை அழகான பாடமாக உணர்த்தியது.
இப்படத்தை பத்திரிகையாளர்கள் பெரிதளவில் பாராட்டினர். மேலும் மக்களிடையே இந்த படத்திற்கு பாசிட்டிவ்வான விமர்சனங்கள் கிடைத்தன.
இந்த நிலையில் இந்த படம் தற்போது அமேசான் மற்றும் ஆஹா ஓடிடி தளங்களில் வெளியாகி உள்ளது. திரையரங்குகளில் பார்க்காத பலரும் தற்போது ஓடிடி தளங்களில் இந்த படத்தை பார்த்து பாராட்டி வருகின்றனர்.