Maalaimalar
வில்வ இலை சிவனின் முக்கண்கள் மற்றும் திரிசூலத்தின் அடையாளமாகவும் போற்றப்படுகின்றன.
ஒரே காம்பில் அமைந்த மூன்று வில்வ இதழ்கள் சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மும்மூர்த்திகளையும், படைத்தல், காத்தல், அழித்தல் தொழில்களையும் உணர்த்துகின்றன.
வெள்ளிக்கிழமைகளில் வில்வ மரத்திற்கு பால் ஊற்றி வணங்குவது செல்வத்தை பெருக்கும்.
ஒரு வில்வ இலையை கொண்டு சிவனை மனதார வழிபட்டாலே, ஏழு பிறவிகளில் செய்த பாவங்களும், பிரம்மஹத்தி போன்ற தோஷங்களும் நீங்கும்.
வில்வ இலை மன அழுத்தத்தைப் போக்கும் அருமருந்தாகும்.
திங்கட்கிழமை, சிவராத்திரி, பிரதோஷ நாட்களில் வில்வ இலையை அர்ப்பணித்து சிவனை வழிபட்டால் துயரங்கள் நீங்கி வாழ்வில் அமைதியும், சகல நன்மைகளும் வந்துசேரும்.