கோடியில் இருந்து லட்சமாக சுருங்கிய சம்பளம்

Maalaimalar

தமிழ் சினிமாவின் உச்சநடிகராக இருந்து அரசியலுக்கு வந்தவர் ஜோசப் விஜய்.

முதலமைச்சர் விஜய் ஒரு கலைஞனாக மக்களை மகிழ்விக்க வெள்ளித்திரையில் அரிதாரம் பூசினார்.

முன்னணி நடிகராக, ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளையடித்த அவருக்கு அப்போது சம்பளம் கோடிகளில் கிடைத்தது.

இப்போது சேவையாற்றவேண்டும் என்ற ஒரே நோக்கத்துக்காக அரசியலில் குதித்த, அவருக்கு தமிழக மக்கள் முதலமைச்சர் நாற்காலியை கொடுத்து அழகு பார்த்துள்ளனர்.

முதலமைச்சராக ஜோசப் விஜய்க்கு தற்போது சம்பளமாக மாதம் ரூ.2 லட்சத்து 5 ஆயிரம் மட்டுமே கிடைக்கிறது.

விஜய் தேர்தல் பிரசாரத்தின்போது, கோடிகளில் வாங்கியதை விட்டுவிட்டு மக்களுக்கு சேவையாற்ற வந்திருக்கிறேன் என்று கூறி வந்தார். அதை தற்போது செயலிலும் காட்டி வருகிறார்.

பணம் பெரிதல்ல மக்களின் மனம்தான் பெரிது என்று கோடியை விட்டுவிட்டு, லட்சத்தை விரும்பி ஏற்றுக்கொண்டிருக்கிறார்.