இதில் கதாநாயகியாக தேசிய விருது பெற்ற நடிகை நித்யா மேனன், நடிகர் யோகி பாபு உட்பட பலர் நடிக்கின்றனர்..இந்த படம் எனது பாணியில் குடும்பப் படமாக அமையும். இளைஞர்களுக்கு பிடிக்கும் படமாகவும் இது இருக்கும் என்று இயக்குனர் பாண்டிராஜ் தெரிவித்துள்ளார்..மேலும் விஜய் சேதுபதியும், இயக்குனர் பாண்டிராஜும் இணைந்துள்ள முதல் படம் இதுவே. இதனால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.