விஜயதசமியில் வித்யாரம்பம்

Maalaimalar

விஜயதசமியில் தொடங்கும் எந்த ஒரு காரியமும் வெற்றியை தரும் என்பது நம்பிக்கை.

விஜயதசமி அன்று குழந்தைகளை முதன் முதலில் பள்ளியில் சேர்க்கும் வழக்கம் உள்ளது. 'வித்யா என்றால் 'அறிவு' என்றும், 'ஆரம்பம்' என்றால் 'தொடக்கம்' என்றும் பொருள்.

குழந்தைகளுக்கு முறைப்படி கல்வி தொடங்குவதற்கு முன்பு, கோவில்களிலோ அல்லது வீடுகளிலோ நடத்தப்படும் தொடக்க விழாதான் 'வித்யாரம்பம்'.

முதலில் ஒரு தட்டில் அரிசி அல்லது நெல்லை பரப்பி வைத்து விட்டு, குழந்தையின் கைகளைப் பிடித்து பெற்றோர் 'ஓம்' என்றோ அல்லது 'அ' என்றோ எழுத வைப்பர்.

விஜயதசமி நாளில் கல்வியை தொடங்கினால் ஞானமும், அறிவும் பெருகும் என்பது நம்பிக்கை.