முடி சார்ந்த பராமரிப்புக்கு சில இயற்கையான வைத்தியங்களைக் கையாள்வதன் மூலம் முடி ஆரோக்கியத்தைப் பராமரிக்கலாம்..முடி ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும், முடி சார்ந்த பிரச்சனைகளிலிருந்து விடுபடவும் வேம்பாளம் பட்டை ஒரு சிறந்த தேர்வாகும்..இது ஒரு வகை மரத்தின் பட்டை ஆகும். உடல் ஆரோக்கியம் முதல் அழகு சார்ந்த பிரச்சனை அனைத்திற்கும் தீர்வு தரக்கூடிய அற்புதமான மூலிகையாகும்..முடி உதிர்தல், உடைதல், இளநரை, பொடுகு, பேன் தொல்லை மற்றும் அரிப்பு போன்ற பிரச்சினைகளுக்கு வேம்பாளம் பட்டை சிறந்த தீர்வாகும்..பாத்திரம் ஒன்றில் தேங்காய் எண்ணெயை ஊற்றி டபுள் பாயிலிங் முறையில் சூடு செய்ய வேண்டும்..இந்த எண்ணெயில், எடுத்து வைத்த வேம்பாளம்பட்டையைச் சேர்த்து சூடு செய்யலாம். எண்ணெய் சூடாக சூடாக, பட்டையிலுள்ள நிறம் முழுவதும் எண்ணெயில் இறங்கும்..எண்ணெய் நன்கு சூடானதும் அடுப்பை அணைத்துவிட்டு எண்ணெயை ஒரு ஓரமாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்..பட்டையை வெளியே எடுத்து விடலாம் அல்லது எண்ணெய்க்குள் ஊறிக் கொண்டு இருந்தாலும் பிரச்சனை எதுவும் இல்லை. இப்போது வேம்பாளம்பட்டை எண்ணெய் தயாராகி விட்டது..தலைக்கு குளிப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக தேய்த்து, முடியின் வேர்க்கால்களிலும் நன்கு மசாஜ் செய்துவிட்டு பிறகு குளிக்கலாம்..முடியின் வேர்க்கால்கள் முதல் நுனிப்பகுதி வரை முடியை உறுதியாக்கி தலைமுடி உடைவதைத் தடுக்கிறது. முடியின் வளர்ச்சியையும் வேகமாகத் தூண்டுகிறது.