ஐஸ்வர்யங்களை அள்ளித்தரும் வரலட்சுமி விரதம்

Maalaimalar

வரலட்சுமி என்றால் 'வரங்களை அருளும் லட்சுமி' என்று பொருள்.

சுமங்கலி பெண்கள், தங்கள் கணவன் ஆரோக்கியமாகவும், நீண்ட ஆயுளுடனும் வாழ்வதற்கும் வரலட்சுமி விரதத்தை மேற்கொள்கிறார்கள்.

வரலட்சுமி விரதம் இருந்து மகாலட்சுமியை வழிபட்டால் வீட்டில் செல்வ வளம் பெருகும்.

வரலட்சுமி விரத நாளன்று, மகாலட்சுமி தாயார் நம் இல்லம் தேடி வருவதாக நம்பிக்கை.

மகாலட்சுமிக்கு மலர் தூவி, கற்பூர தீபம் காட்டி, அவருக்குரிய பாடல்களை பாடி வழிபட வேண்டும்.

வரலட்சுமி விரத நாளன்று, அன்னைக்கு படைக்கப்படும் நைவேத்தியங்களை வீட்டிற்கு வருபவர்களுக்கும், ஏழை, எளிய மக்களுக்கும் கொடுப்பது மிகவும் சிறப்பு.