பிரபலங்களின் திருமண நிச்சயதார்த்த மோதிரங்களின் மதிப்பு...

Maalaimalar

விஜய் தேவரகொண்டாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட ராஷ்மிகா மந்தனாவின் நிச்சயதார்த்த மோதிரங்கள் 16 கற்கள் பதித்த வைர மோதிரங்கள். இவற்றின் மதிப்பு சுமார் ரூ.30 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

சமந்தா அணிந்திருந்த நிச்சயதார்த்த மோதிரம் ரூ.50 லட்சம் முதல் ரூ.1 கோடி இருக்கும் என மதிப்பிடப்பட்டிருந்தது. தென்னிந்திய திரை உலகில் அதிக பேசும் பொருளான நிச்சயதார்த்த மோதிரங்களில் இதுவும் ஒன்று.

நயன்தாரா-விக்னேஷ் சிவன் மோதிரத்தில் இருந்த வைரத்தின் அளவு மற்றும் தரத்தை வைத்து பார்த்தால், அதன் மதிப்பு ரூ.50 லட்சம் முதல் ரூ.1.5 கோடி வரை இருக்கக்கூடும் என நகை வல்லுநர்கள் மதிப்பிட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது.

நடிகர் சித்தார்த்தை திருமணம் செய்து கொண்ட அதிதி ராவ் இரண்டு ஆன்மாக்களின் இணைப்பை குறிக்கும் இரட்டைக்கல் வைர மோதிரத்தை பழங்கால பாணியில் அணிந்திருந்தார்.

தீபிகா படுகோனே:- ரூ.1. கோடி முதல் ரூ.2.7 கோடி மதிப்பிலான கண் கவர் செவ்வக வடிவ ஒற்றை கல் மோதிரத்தை அணிந்திருந்தார்.

ஷில்பா ஷெட்டி:- ரூ.3 கோடி மதிப்பில் 20 காரட் கட் வைர ஒற்றை கல் மோதிரத்தை அணிந்திருந்தார்.

ரூ. 2 கோடி மதிப்புள்ள பில்டிங் பாணியிலான குசன் கட் வைரத்தை கொண்டு பிரியங்கா சோப்ராவின் நிச்சயதார்த்த மோதிரம் வடிவமைக்கப்பட்டிருந்தது.